பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3:34 வடவேங்கடமும் திருவேங்கடமும் னது தன் உணவிற்கும் வலிமைக்கும் தகுந்ததாகிய ೯೮್ಲಿ வடிவுள்ள இடபராசியை எதிர் நோக்கிக் கொண்டு அவ் வகை வலிமை இல்லாத மேடராசியைக் கண்டு வெறுத் திருக்கின்றது என்றும் பொருள் கொள்ளலாம். மலையில் குரங்குகள் குதித்து விளையாடிக் கொண் டுள்ளன. மந்திபாய் வடவேங்கடம்' அல்லவா? அவை குளிர்ச்சியான மலை முகட்டில் நண்டு வடிவமான கடக ராசி போருந்தி வரக் கண்டு அஞ்சியோடுகின்றன. இக் காட்சியைத் திவ்விய கவி, தாவிலரும் வானரங்கள் தண்குவட்டில் கற்கடகம் மேவிவரக் கண்டோடும் வேங்கடமே (17) (குவடு-சிகரம்; மேவி-பொருந்தி1 என்று தமக்குக் காட்டுவர். அடுத்து யானைகளின் ஊடல் காட்சி ஒன்று வருகின்றது. மருத நில உரிப்பொருள் குறிஞ்சி நிலத்துக்கு உரிய கருப் பொருளிடம் காணப்படு கின்றது. பிடி களிற்றினிடத்து ஏதோ ஒரு குற்றத்தைக்கற் பித்துக் கொண்டு அதன் காரணமாக அதனிடம் வெறுப் புக் காட்டி ஊடி நிற்கின்றது. இது வானத்தில் தற்செய லாகச் சிங்க வடிவமான சிம்ம ராசியைக் கண்ணுறுகின் றது. கண்டதும் அஞ்சி அந்த அச்சமிகுதியினால் 2ண்டலை மறந்து தானே ஒடி ஆண் யானையைப் பற்றுக் கோடாகக் கொண்டு அதனைத் தழுவுகின்றது. ஒண்சிந்து ரத்தைவெறுத் துடும் பிடிவேழங் விண்சிங்கம் கண்டனைக்கும் வேங்கடமே (18) (சிந்துரம் ஆண்யானை, ஊடும்-பிணங்கும்; பிடி வேழம்-பெண் யா ைன). என்பது கவிஞரின் சொல்லோவியம்.