பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்வியகவி காட்டும் திருமலைக் காட்சிகள் 愛豊器 அடுத்து, கழைக் கூத்து ஒன்றைக் காட்டுகின்றார் திவ்விய கவி. மலையின்மீது ஓங்கி வளர்ந்துள்ள மூங்கிலுக்கு நேராக பெண் வடிவமான கன்னி இராசி வருகின்றது. இக்காட்சி கழைக் கூத்திடோல் தோற்றம் அளிக்கின்றது. மாதுமடக் கன்னிகழை வந்தணுகிக் கம்பத்தின்

மீது நடிப் பாளொக்கும் வேங்கடமே (19) (மாது-அழகு, கன்னி-இளம் பெண்; கழை-மூங் கில்; கம்பம்-நாட்டியக் கழைக்கோல்} என்பது அய்யங்காரின் சொல்லோவியம். இஃது ஒர் அற்பு தமான காட்சி. மூங்கிலின் வளத்தைக் கொண்டு இன்னொரு அற்புத மான காட்சியை மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்து கின்றார் திவ்விய கவி, ஒரு மூங்கில் ஓங்கி வளர்ந்து தித் கின்றது. அதற்கு நேராகச் சுறா மீன் வடிவமான பகர ராசி வந்து தங்கும்போது அது மன்மதனது கொடிமரம் போல் காட்சியளிக்கின்றது. தேன்ஏறித்தேன்வைக்கும் திண்கழைமேல் விண்மகரம் மீன் ஏறி வேள்கொடியாம் வேங்கடமே (22) (தேன்-வண்டுகள், தேன்-தேன் கூடு; திண்கழை வலிய மூங்கில்; மகரம்-மகர ராசி) என்று காட்டுவர்; மன்மதன் சுறாமீன் வடிவத்தைக் கொண்ட கொடியை உடையவன்; அதனால் அவனுக்கு வடமொழியில் மகரத்வஜன் என்றும் தென்மொழி யால் சுறவக் கொடியோன்' என்றும் பெயர்கள் உண்டு. மலைக் குறவர்கள் இரத்தின வாணிகம் நடத்துவது அற்புதம். வானத்தில் நிறைகோல் வடிவமான துலாராசி