பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்வியகவி காட்டும் திருமலைக் காட்சிகள் ፰ûT திருவேங்கடமலையில் ஓங்கி வளர்ந்துள்ள மரக் கொம்பொன்றில் தே ன் கூ டு கட்டப்பெற்றுன்னது. வானத்தில் செல்லுகின்ற பிறைச் சந்திரனது வளைத்த வடிவமான கொம்பு அத்தேனிறாலில் பட்டு அது உடை கின்றது. அதிலிருந்து ஒழுகும் தேன் வானத்திலுன்ன அதற்கு நேராகக் கீழே வந்து பொருந்தும் குடவடிவ மான கும்.பராசியில் நிறைகின்றது. ஒண்கொம்பிற் தேன் இறால் ஊர்பிறைக் கேட்டாலுடைந்து விண்கும்பம் வாய்நிறைக்கும் வேங்கடமே (23) (கொம்பு-கிளை; இறால்-தேன்கூடு; கோடுவளைந்த வடிவம் ! கற்பனை அற்புதம். திருவேங்கட மலையிலுள்ள மரக் கொம்பு கும்பராசிக்கு மேலுள்ள தென்றும், அதன்மீது பிறைமதி படப் பெறுவது என்றும் கூறியதனால் மலை யின் உயர்வையும் மலைவளத்தையும் காட்டிய படியாகும் இது. திருமலையில் திருக்கோயிலுக்கு அருகிலுள்ள கோனே ரியில் கூலிைளவெண் குருகு ஒன்று ஒடு மீன் ஒட உறுபீன் வருமளவும் காத்திருக்கின்றது. விண்ணில் செல்லும் மீன. இராசியின் வடிவம் நீரில் தெரியக் கண்டு அதனை உண்மையான மீன் என்று கருதிக் கொத்துகின்றது; ஏமாந்து போகின்றது. இங்ங்ணம் இராசி மண்டலக் காட்சிகளைக் காட்டிய வர் நம்மை விண்மீன் மண்டலத்திற்கு இட்டுச் செல்லுகின் நார்.