பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

驾懿 வடவேங்கடமும் திருவேங்கடமும் விண்மீன் மண்டலக் காட்சிகள்: திருமலையில் ஆண் குரங்கு (கடுவன் பெண் குரங்கு (மந்தி)ன்மாக இரண்டு குரங்குகள். 'மண் மூலம் தா என்று மந்தி கடு வனைக் கேட்கின்றது; அதாவது மண்ணிலிருக்கும் கிழங்கை உண்ணுவதற்குப் பெயர்த்தெடுத்துத் தருமாறு கேட்கின்றது. உடனே வானத்திலுள்ள மூலம் என்ற நட் சத்திரம் (விண் மூலம்) அதனைச் செவி மடுத்து தன்னைப் பிடித்துச் கொடுக்கச் சொன்னதாகக் கருதி அஞ்சி நடுங்கு கின்றது. மண்மூலம் தாளன்று மந்திகடு வற்குரைப்ப விண்மூலம் கேட்டேங்கும் வேங்கடமே (25) (மண்மூலம்-கிழங்கு விண்மூலம்-மூல நட்சத் திரம்; என்பது திவ்விய கவியின் சொல்லோவியம். இந்த வருண னையில் அம்மலை நட்சத்திர வீதிக்கு அருகில் உள்ளபடி யையும், அம்மலைக் குரங்கு தேவ கணமும் அஞ்சத் தக்க வலிமையுடைய தென்பதும் தெளிவாகும். திருவேங்கடமலையில் தொங்கவிடப் பெற்ற பொன் னாலாகிய ஊஞ்சலிலிருந்து கொண்டு மகளிர் உந்தி உத்தித் தள்ளி விளையாடுகின்றனர். அந்த ஊஞ்சல் அவிட்ட நட்சத்திரத்தில் படுங்கால் அங்கு அம்மகளிர் இறங்குகின்றனர். நாலவிட்ட பொன்னூசல் நன்னுதலார் உந்துதொறும் மேலவிட்ட தொட்டிழியும் வேங்கடமே (26) (நாலவிட்ட-தொங்கவிடப்பட்டுள்ள, நு. த ல் - நெற்றி, இழியும்-இறங்கும்) என்பது கவிஞர் காட்டும் காட்சி.