பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்வியகவி காட்டும் திருமலைக் காட்சிகள் 念烈星 அங்கயலின் மேகம் அதிரப் பெரும்பாந்தள் வெங்கயம் என்று அங்காக்கும் வேங்கடமே (30) (அயல்-அருகில்; பாந்துள்-மலைப் பாம்பு, வெங் கயம்-இலவ்விய மத யானைகள்: அங்காத்தல் வாய் திறத்தல்) என்ற அடிகளில் இக்காட்சியினைக் காட்டுவார் கவிஞர். தேவர்களும் குறிஞ்சி நிலத்துக் குறத்தியரும் அமிர்தத் தையும், குறிஞ்சித் தேனையும் பண்டமாற்றுதல் செய்து கொள்ளுகின்றனர். வன்குறிஞ்சி மாதர்பால் வானோர் மருத்துக்கு மென்குறிஞ்சித் தேன்மாறும் வேங்கடமே ( :) o * தியர்; வ .ே ை ர் مي

{வன்குறிஞ்சிமாதர்-குற s. ... f* 浚 மருந்து-தேவாமிருதம்} என்பதில் இக்காட்சியினைக் காணலாம். இதனால் உம் பருலகத்துக்கருதில் திருமலை உள்ளதென்பதும், தேவர் களின் நடமாட்டம் இம்மலையில் நிகழ்கின்றது என்பதும் உம்பர் உலக அமிர்தத்தினும் வேங்கடமலைத்தேன் இனிது என்பதும் அறியக் கிடக்கின்றன. இன்னோர் இனிய அழகிய காட்சி : திருமலையில் பெண் குரங் கொன்று மாமரத்தில் பழுத்துத் தொங்கும் தேமாங்கனியொன்றினைக் கையில் கொண்டு தாவிச் செல்கின்றது. இதனை உம்பருலகில் கற்பகத் தருவில் அமர்ந்திருக்கும் ஆண் குரங்கு அக்கனியைத் தனககுத் தரு மாறு கையை நீட்டுகின்றது. வாவுகவின் மந்திநுகர் மாங்கனிக்குக் கற்பகத்தின் மேவுகவி கைநீட்டும் வேங்கடமே (42