பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்வியகவி காட்டும் திருமலைக் காட்சிகன் 驾复署 என்ற அடிகளில் காட்டப் பெறும் காட்சி நம் சிந்தையைக் கவர்வதாகவே உள்ளது. மரக்கொம்பில் தொங்கும் தேனிறாலைக் கவர்வதற்குக் கை நீட்டுகின்றது. கானில் திரியும் வேழம். அக்காட்சி திங்களைப் பற்றுவதற்கு அதன்மீது கறுக்கொண்டு எழும் இராகு என்னும் கரும் பாம்புபோல் தோன்றுகின்றது. இங்ங்ணம் காட்சிகளைத் தலைக்கட்டுகின்றார் திவ்வியகவி. இயற்கைப் பொருள்கள் இன்பமயமான சமாதியில் அடங்கிக் கிடக்கின்றன. அவற்றின் சமாதியைக் கலைக்கா மலிருப்பதே அறம், அந்தச் சமாதியில் நாம் கலந்து கொள்ள முயலவேண்டும். கலந்து கொள்ளும் இயல்புடை யவனே கவிஞன். அவன் இயற்கையோடு பழகுவதில் திறன் வாய்ந்தவன். கவிஞன் இயற்கையை அதன் இன்ப சமாதி கலையாமல் தழுவுகின்றான். அவன் அநுபவித்த இன்பப் பெருக்கில் ஒன்றிரண்டு திவலைகள் அலன் பாடிய பாடல்களில் சொட்டும். அதைப் பார்த்தே நாம் கல்ை கள், கலைகள் என்று கொண்டாடுகின்றோம். இவ்விய கவியின் இன்பப் பெருக்கின் ஒன்றிரண்டு திவலைகளே அப்பெருமகன் காட்டும் திருமலைக் காட்சிகள்.