பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்விய கவியின் கருத்தில் வேங்கடவாணன் 露置莎 மேனியில் சீவான்மா இரத்தினங்களுள் சிறந்த கெளத்துவ மாகவும், அழியாத மூலப்பிரகிருதி ரீவத்சம் என்னும் மறுவாகவும், மான் என்னும் தத்துவம் கெனமோதகி என்னும் கதையாகவும், ஞானம் என்னும் தத்துலம் நாந்தகம் என்னும் வாளாகவும், தாமச அகங்காரம், சாத்துவிக அகங்காரம் முறையே சார் ங்கம் என்னும் வில்லாகவும், பாஞ்சசந்யம் என்னும், திருச்சங்காகவும், மனம் சுதர்சனம் என்னும் திருவாழியாகவும், ஞானேந்திரி யங்கள் ஐந்தும் கருமேந்திரியங்கள் ஐந்தும் ஆகிய இந்திரி யங்கள் பத்தும் அம்புகளாகவும், தத்மாத்திரங்கன் ஐந்தும் பூதங்கள் ஐந்தும் வனமாலையாகவும் இங்ங்ணம் எல்லாத் தத்துவங்களும் எம்பெருமானுக்கு ஆபரணமாக வும் ஆயுதங்களாகவும் திகழும் என்பர் வேதாந்த தேசிகர். திருவடியின் சிறப்பு : திருவள்ளுவர் முதலாக ஆழ்வார்கள் வரை அனைவரும் எம்பெருமானின் இணை யடிகளைச் சிறப்பித்துப் பேசுவர். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார் (10) என்பர் வள்ளுவப் பெருந்தகை. இந்தக் கூற்றுக்கொப்பச் சரணம் அடைகின்ற உயிர்கட் கெல்லாம் உய்யத் துணையாயிருப்பது எம்பெருமானின் திருவடியாகும். "சேவிபக்கல் சேஷபூதன் இழியுந் துறை ப்ரஜை முலையிலே வாய்

    • *

வைக்குமாப் போலே (சேஷி - இறைவன்; சேஷபூதன் - சீவான் மா; ப்ரஜை-குழந்தை;