பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi பட்டமும் (பிஎச். டி.) (1978) பெற்று உலகியலை யோட்டித் தொழிலுக்குத் தேவையான தகுதியை ஆக்கிக் கொண்டவா குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை, கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை’ பெற்றவர் என்பதற்காகவே இப்பட்டங்கள். நல்லாசிரியர் விருதும் தானாக இவரை வந்தடைந்தது. செட்டிநாட்டு தனவைசிய இளைஞர்களிடம் தனித் தன்மை உண்டு. பொதுவாக அடக்கம், இறைபக்தி, உழைக்க வேண்டும் என்ற அவா ஆகியவை மீதுர்ந்து நிற்கும். எல்லோரிடமுமே செய்வன திருந்தச் செய்” என்ற நற்பண்பு காணப்படும். "பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்பதை இவர்களிடம் தெளிவாகக் காணலாம். இவற்றை இயல்பாகக் கொண்ட என் அருமை மாணாக்கர் பதிநான்கு (கவிதை, கட்டுரை) நூல்களின் ஆசிரியர். எழுதினால்தான் அறிவுத்திறன் பெட்டி போட்ட ஆடைகள்போல் சீர்பட்டுப் பொலிவு பெறும் என்பது ஆங்கில அறிஞர் பேக்கனின் கூற்று.இதழாசிரியப் பயிற்சியும் இவருக்கு உண்டு. கவிபாடும் பண்பு கருவிலே திருவாக அமைந்தவராதலால் தமிழ் நாட்டிலும் பம்பாய், டில்லி முதலிய பிற இடங்களிலும் ஏறத்தாழ 509 கவியரங்குகளில் பங்கு கொண்டு தமிழ்ப் பணியாற்றி tl : T , இத்தகைய சிறப்புகளையெல்லாம் கொண்ட டாக்டர் சிங்கார வடிவேலனின் சிறப்புப் பாயிர மாலை' -நன்லூ லார் கூறும் சிறப்புப் பாயிர இலக்கணப்படி (நூற்பா-47) 'மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் போல் அமைந்து இந்நூலிற்குப் பொலிவு தருவது இந்நூலின் பேறு; என்பேறுமாகும். இந்தப் பாமாலை வழங்கிய என் மாணாக்கர் நீடு புகழும் நீங்காத செல்வமும் நிறைந்த ஆயுளும் பெற்றுத் திகழ வேண்டும் எனபது என் நன்றி. கலந்த ஆசி.