திவ்விய கவியின் கருத்தில் வேங்கடவாணன் 3.1% வேங்கடத் தச்சுதனே முக்திக்கு வித்தகன் என்றே சுருதி முறையிடுமே (33). 1சித்திக்கு-வீடுபேற்றுக்கு வித்து-மூலம்; பொய்ந் நூல்-பர சமய நூல்; சுத்தி-கதறிப் படித்து: கட்டு ரைக்க-உறுதியாகச் சொல்ல; அத்தி-நீர் கு" சூழ்ந்த சுருதி-வேதம்) வீடுபேற்றினை அளிக்க வல்லவன் திருமலையில் எழுந்தரு ளியிருக்கும் திருமாலே என்று திருமறைகள் வற்புறுத்திக் கூறும் என்பதை உறுதியாகக் கூறுவர் திவ்விய கவி. பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்தன்று உடனே விழுங்கி கரந்து உமிழ்ந்து கடந்து இடத்த(து) கண்டும் தெளியகில்லீர்; சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குரு கூரதனுள் பரன்திறம் அன்றிப்பல் உலகீர்தெய்வம் மற்றில்லை பேசுமிமினே" (கரந்து-மறைத்து, பரன்-மேலானவன்; என்றாற் போன்ற ஆழ்வார் பாசுரங்களின் வாய்பாட் டைக் கொண்டது இத்திருப் பாடல். இங்கனம் ஆழ்வார் களின் பாசுரங்கள் திவ்வியகவியின் வாக்கில் செல்வாக்குப் பெற்றுத் திகழும் இடங்கள் எண்ணற்றவை. வீடுபேற்றை விரும்புவோரைத் திருவேங்கடமுடை யானின் திருவடிகளைத் தரிசிக்க வேண்டும் என்று மக்க ளைக் கூவி அழைக்கின்றார் திவ்விய கவி. 3. திருவாய் 4.10:3
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/251
தோற்றம்