பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்வியகவியின் கருத்தில் வேங்கடவாணன் 說暨證 மானம் காத்தமை (65), குன்றமேந்திக் குளிர் மழை காத்தமை (58) போன்ற நிகழ்ச்சிகளையும் காட்டி அடியார்களைக் காக்கும் உண்மையை மேலும் அரண் செய்வர்; சரண் அடைந்தவர்க்கு வைகுந்தமும் ஈவர் என்று வலியுறுத்துவர் (55). இத்தன்மையுடைய எம் பெருமானே திருவேங்கடத்தில் எழுந்தருளியிருப்பதாகப் பாடல்கள்தோறும் பகர்வர். வீரச் செயல்களும் வெற்றிச் சிறப்புகளும் : எம் பெருமானுடைய வீரச் செயல்களையும் வெற்றிச் சிறப்பு களையும் பேசி இறையதுபவம் பெறுவது ஆழ்வார் பெருமக்களின் இயல்பு. 'ஆழியெழ சங்கும்" எனத் தொடங்கும் திருவாய்மொழியில் இதனை அறியலாம். ஆழ்வார்கள் தோற்றுவித்த மரபினைப் பின்பற்றியே தம் திவ்விய கவியும் இறையதுபவம் பெறுகின்றார். திவ்விய கவி கிருட்டினாவதார நிகழ்ச்சிகளில் அதிகமாக ஈடுபடு கின்றார். -கூடத்துக் கம்பவன மாவென்றான் காசினிக்கும் வெண்ணெய்க்கும் செம்பவளம் ஆவென்றான் சேர்வு (16) (கூடம் - யானைச் சாலை; கம்பம் - கட்டுத்தறி' வளம்மா-ழுதக்கொழுமையான யானை: காசினி. உலகம்; செம்பவளம்-வாய்; ஆஎன்றான்-அங் கர்த்தான்; சேர்வு-சேர்ந்திருக்கும் இடம்1 குவலயாபீட மதயானையைக் கொன்றொழித்தவனும், பிரளய காலத்தில் உண்ணுவதற்காகவும் கிருட்டினாவ தாரத்தில் வெண்ணெயை உண்பதற்காகவும் சிவந்த 13. திருவாய் 7. 4.