பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. முத்தமிழ்க் கவியின் சிந்தனையில் திருவேங்கடம்’ முத்தமிழ்க்கவி அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் மகள் வயிற்துப் பேரர். செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள பொன்விளைந்த களத்துர் இவர் ஊராகும். இவர் சற்றேறக்குறைய 450 ஆண்டுகட்குமுன் வாழ்ந்தவர். இவர் திருவேங்கடக்கலம்பகம்’ என்ற ஒரு சிற்றிலக்கி பத்தை இயற்றியுள்ளார். இது திருவேங்கடமலைமீதும், அம்மலையின்மீது திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் திருவேங்கடமுடையான் மீதும் காதல் கொண்ட ஆசிரியரின் உள்ளத்தினின்றும் உருக்கொண்டதாகும். ஒரு திருப்பாடலில் தான் திருவேங்கடமுடையானைப் பாடுவதற்குக் காரணம் கூறுவதுபோல் அமைந்துள்ளது. ஆழ்வார் பெருமக்கள் அனைவரும் நாக்கொண்டு மாணி டம்பாடாத புண்ணிய சீலர்கள். இக்காலத்துப் புலவர்கள் போலவே இப்புலவர் பெருமானும் சில்வாழ் பல்பிணிச் சிற்றுயிர்களை ஒரொரு கால் பாடியிருக்கலாம். அந்த அழுக்கு நாக்கினின்றும் நீங்குவதற்காகவே திருவேங்கட முடையானின் திருநாமத்தைப் பாடித் துதிப்பதாகக் கூறுவர்.

  • சப்தகிரி (சனவரி-1991)யில் வெளிவந்தது.