பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 வடவேங்கடமும் திருவேங்கடமும் 1.தண் ஆகும்-குளிர்ச்சி நிறைந்த வேண்டிவி ரு ம் பி; எண்ணார்க்கு-தியானிக்காதவர்க ளுக்கு இருள்-அஞ்ஞானம்; தொண்டர்-அடி யார்கள் ஏவல்தொழில்-ஏவிய சிறுதொழில்; பண்-செய்கின்ற; ஆச்ை-அன்பு: தொண்டர்வர். அடியார்களின்; பதமலர்-திருவடித் தாமரை) உம்பர் உலகத்துக் கற்பக மலரையும் தான் விரும்பவில் லையென்றும், திருவேங்கடமுடையானின் தொண்டர் களின் திருப்பாத மலரே தாம் விரும்பும் மலர் என்றும் கூறித் தமது ஆழ்ந்த வைணவப் பற்றைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றார். இப்பாடலில், 'கண்ணாயிரம்... வேண்டிலம்’ என்ற பகுதி, ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வான் ஆளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் -பெரு. திரு. 4:2 என் குலசேகரப் பெருமானின் திருவாக்கையும், பச்சைமா மலைபோல் மெனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா, அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருள் ளானே. -திருமாலை-2 என்ற தொண்டரடிப் பொடிகளின் பாசுரத்தையும் நினைக் கச் செய்கின்றது.