பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛盛器 வ: வேங்கடமும் திருவேங்கடமும் (சரணம் அடைக்கலம்; சரண்-திருவடிகள்; சனர் மக்கள்; சனனம்- பிறப்பு: மரணம்-இறப்பு அடுத்து-அடைந்து; தன் பதம்-தனது பரமபதம்; கிரன்iம்-ஒளி; விரிக்கும்-வீசும்; மதி-சந்திரன்; அம்பொன் - அழகியடொன், அரணம்-மதில்; உடுத்த-சூழ்ந்துள்ளர் வானவர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து, எல்லோரு மாகச் சேர்ந்து எம்பெருமானை வழிபடுகிறார்களாம். அடுத்தபடியாக, திருமழிசைப் பிரான் நான்முகன் திருவந்தாதியில், தண்ணருவி வேங்கடமே வானோர்க் கும் கண்ணோர்க்கும் வைப்பு’ என சுரர்களும், நம் போன்து இவ்வுலகத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து போற்றும் திருவேங்கடமே என்று அவன் எழுந்தருளி யிருக்குமிடத்தைச் சிறப்பித்து அருளிச் செய்கிறார். குலசேகரப்பெருமாள் அருளிச் செய்த பெருமாள் திரு மொழியில் 'ஊனேறு செல்வத்து' (4) என்ற பதிகத்தில்

செடியாய் வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா, நின்கோயி லின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையருங் கிடத்தியங்கும் படியாய் கிடந்து உன் பவளவாய் காண்டேனே'(9)

என்ற பாசுரத்தில், நம் போன்ற அடியவர்களும், நான் முகன் தொடக்கமான சகல தேவர்களும் கூடித் தொழும் திருமலையில் ஒரு படியாகக் கிடந்து, அந்த ஆபரணங் களுக்கு அழகு செய்யும் எம்பெருமானின் திருப்பவள வாயைச் சதா அதுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென திருவேங்கடவனிடத்தில் பிரார்த்திக்கின்றார் நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில், **கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே