பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意器貂 வடவேங்கடமும் திருவேங்கடமும் லிருந்தே திக்கு நோக்கித் தண்டம் சமர்ப்பிப்பதற்கு உரிய பெருமையையுடையவர்கள் என்று பேசுவான் வாரை மேலும் கூறுவான்: 'திருமலையில் உடல் தூய்மை :ம் மனத்துசய்மையும் உடைய அந்தணர்கள் இறங்கி மூழ்கி நீராடும் துறைகளும் ஆறுகளும் உள்ளன. முனிவர் கள் வசிக்கின்ற ஆசிரமங்கள் உள்ளன. மேகங்கள் தவழும் தாழ்வரைகள் அம்மலையைச் சூழ்ந்துள்ளன. தேவமாதர்கள் தங்கள் இசைப்பாட்டுக்கு ஒத்து வருமாறு கின்னரம் என்னும் இசைக்கருவிகளின் நரம்புகளை வருடுந்தோறும் உண்டாகும் ஒசையினால் யானைகளின் இனங்கன்றுகளும் புவியின் குட்டிகளும் தம்முள் பகை பின்றி உறங்கும் இடங்கள் அம்மலையில் உள்ளன. இவற்றையெல்லாம் எடுத்துக்கூறும் முகத்தான் கம்ப நாடன் வாணர வேந்தன் வாய்மொழியாக, தோதவத்தித் தூய்மறையோர் துறையாடு நிறையாறும் சுருதித் தொன்னூல் மாதவத்தோர் உறைவிடனும் மழையுறங்கும் மணித்தடனும் வான மாதர் கீதம் ஒத்த கின்னரங்கள் இன்னரம்பு வருடுதோறும் கிளக்கும் ஒதை போதகத்தின் மழக்கன்றும் புலிப்பறழும் உறங்கிடனும் பொருந்திற் றம்மா' -நாடவிட்ட-28 (தோ தவத்தி-தூய்மையான ஆடை, துறை - துறைகள்: நூல்-சாத்திரம், மழை-மேகங்கள்; தடன்-தாழ்வரைகள்: கின்னரம்-ஒர் இசைக் கருவி வருடுதல்-தடவுதல்; ஒதை-ஓசை போத கம்-யானை)