பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமன் கருத்தில் திருவேங்கடம் ፵፰,ጃ சால முளைக்கும் சீற்றமெனும் தழலை யவிக்க நின்மார்பில் கோலம் பொலிய வீற்றிருப்பாள் கொற்றம் வளர்க பல்லாண்டு. இதில் எம்பெருமாட்டியின் புருஷகாரம் (தகவுரை) குறிப் பிடப் பெற்றிருப்பதைக் காணலாம். 'நீரிலே நெருப்புக் கிளருமாப்போலே குளிர்ந்த திருவுள்ளத்தில் அபராதத்தால் சீற்றம் பிறந்தால் பது இவளுக்காக” என்ற முமுட்சுப்படியின் வாக்கியத்தை நினைத்தவாறு இப்பாடல் கவிஞரின் உள்ளத்தில் அரும்பியிருக்க வேண் டும். திருப்பாவை ஆண் ட | ள் திருப்பாவையின் பாணியில் எழுந்த திருப்பாவை'யில் இந்த ஆசிரியரின் இரண்டு பாசுரங்களைக் காண்போம். வேங்கடத்து மேவும் விமலன்; அருச்சுனர்க்குப் பாங்குடைய கீதை பகரும் பரஞ்சோதி; தேங்கமழுந் தண்டுளவத் தேவன் வடிவாகி ஒங்குபுகழ்க் கோதை யுவர்க்கும் தமிழ்புனைந்து தீங்கவிஞர் நெஞ்சில் சிறக்கும் நலம் வழங்கி வாங்கருஞ்சீர் மார்கழி வந்ததுகாண்! நேரிழையீர்! திங்ககல ஞாலத் திருமலையின் பேர்பாடி ஈங்குயர்த்தும் நோன்பை யியற்றுவோம்:எம்பாவாய்' ஆண்டாள் திருப்பாவையில் பாவை நோன்பு இயற்று வதற்காக நீராடப் போதுவீர்” என்று குறிப்பாக 3. முமுட்கப்படி-127