கம்பராமன் கருத்தில் திருவேங்கடம் 数巻7 ہی سمجتم&، இந்தச் சிற்றிலக்கியத்தில் இன்னொரு பாடலில் ஆழங்கால் படுவோம். “மன்னிய வேங்கடக் குன்றினில் மேவும் மழைமுகிலே! நின்னருள் யாண்டும் ததும்பிக் கிடந்தும் நெறியறியேன்: பன்னருந் துன்பினிற் சாலவும் நொந்தேன்; படர்தடத்துத் துன்னிய மீனின் சிறுநா வறண்டு துவள்வுறுமே" மேகம் எங்கும் பரவிக் கிடப்பதுபோல் திருவேங்கடமு.ை யானின் கருணை வெள்ளம் கோத்து யாண்டும் நிரம்பிக் கிடக்கின்றது. இந்நிலையிலும் உய்யும் நெறியறிய தி துன்பத்தில் உழலும் தன் நிலையை நினைத்து நைகின்றார் ஆசிரியர். நீரினின்று வெளிப் பட்டுக் தரையிற் கிடக்கும் சிறுமீனின் சிறுநா வறண்டு கிடந்து துவள்வுறும் நிலையுடன் தம் நிலையை ஒப்பிட்டுக் கிலேசப் படுகின்றார் ஆசிரியர். அருணகிரியாரின் வாக்கில் காணப்பெறும் செந்தமி ழின் குழைவும், சிந்தைக்கினிய கனிந்த அன்பும், செவிக் கினிய ஓசை நயமும், உள்ளத்தைக் கவர்த்து தேக்கிடும் திருவருட்டன்மையும் போன்ற பற்பல நலங்களும் இந்த ஆசிரியரின் பாடலில் மிக்குத் தோன்றித் திகழ்வதைக் காணலாம். திருவேங்கடத்துக் கோயில் காவலராகத் தோன்றா நிலையில் திகழும் முருகப் பெருமானப் பாடும் பணியினையே பணியாகக் கொண்ட அருணகிரி யார் கந்தன்மீது பல நூல்களைப் பாடிப் பரவசப் பட்டார். அங்ங்னமே சிறந்த திருமாலடியாராகிய தம் கம்பராமனும் திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் சீநிவாசன்மீது ஆயிரம் பாடல்களைப் பாடிக் களிப்பெய்து கின்றார்.
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/299
Appearance