பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 வடவேங்கடமும் திருவேங்கடமும் என்ற பாடல் மிக அருமையாக அமைந்துள்ளது. இறை வன் எங்கும் பரந்துள்ளான் (omripresence) என்ற கருத்து இதில் மிக நுட்பமாக அமைந்துள்ளமை நோக்கத் தக்கது. பொதுவாக இந்த ஆசிரியரின் பாடல்களில் ஆழ்வார் பாசுரங்களின் சாயலும், கம்பனின் சொல்வளமும் மிளிர் வதைக் காணலாம். எங்கோ சென்று அறிவியல் துறையில் பணியாற்ற வேண்டிய அடியேனைத் தமிழ்த் துறைக்கு சர்த்த வரும், தமிழ்ப் புலமைக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல் நின்து வழிகாட்டியவருமான பன்மொழிக்குரிசில் திரு. வே. வேங்கடராஜுலு ரெட்டியான ஒரு சமயம் அடி யேனிடம் பெயர் குறிப்பிடாமல் நம் இராமராசன் பாடல்களை நோக்கினால் அவற்றில் சிந்தாமணி ஆசிரிய ரின் கற்பனையும் சொல்வளமும் தென்படுகின்றன” என் லும், பிறிதொருசமயம் திருத்தக்க தேவரையும் கம்ப நாடனையும் ஒருசேர உருக்கி வார்த்தமை போன்றவன் நம் இராமராசன்” என்றும் கூறியதை நினைவு கூர் கின்றேன்.