፰78 வடவேங்கடமும் திருவேங்கடமும் 3. தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளி எழுச்சியில் பாடல் தோறும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!” என்று முடிவது போலும்,மாணிக்க வாசகரின் திருப்பள்ளி எழுச்சி'யில் பாடல்கள் எம்பெருமான் பள்ளி எழுந் தருளாயே!, என்று இறுவது போலவும், பாரதியாரின் 'பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி"யில் ஐந்து பாடல்களும் 'பள்ளி எழுந்தருளாயே!” என்று முடிவது போலவும் 'திருவேங்கடவன் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களும்; "திருவேங்கடவா திருக்கண் மலர்க!' என்றே இறுகின்றன. இந்நூலில் இரண்டு பாடல்கள் புருஷகார பூதையான பெரியபிராட்டியாரை எழுப்புவதாக அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்றினைக் காண்போம். 'காதஸ் ஸ்மஸ்த ஜகதாம் மதுகைடபாமே; வrோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே யூரீஸ்வாமிதி என ப்ரியதான சீலே துர்வேங்கடேச தயதே தவ ஸாப்ரபாதம்” இப்பாடல், எல்லா உலகும் ஈன்ற என்.அன்னாய்! பொல்லா மதுகை டவரைப் போக்கிய மாயோன் மார்பமர் திருவே! தேவி! ஆயே மனங்கவர் ஆர்.எழில் உருவோய்! அண்டினோர் வேட்பதை அருளிடும் சீலமே! நல்திரு வேங்கட நாயகி கண்விழி: - என்று தமிழ்க் கவிதை வடிவம் பெறுகின்றது. இதன் அடுத்த பாடல் திருமலை நாயகி திருக்கண் மலர்க!” என்று முடிகின்றது. அப்பனை எழுப்பும் பாடல் 7. ஸாப்ரபாதம்-3
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/308
Appearance