强 வடவேங்கடமும் திருவேங்கடமும் |பொறி - புள்ளிகள்; புலிக்கேழ்-புலியின் நிறம்; நரந்தம்-நாரத்தை மரம் நாள்மலர் - புதிய் பூக் கள்; கலை-முசுக்கலை; உகளும் - தாவும்; தேம் கமழ் - தேன நாறும்; பிறங்கிய - விளங்கிய; வேங்கடவைப்பு - வேங்கடமலை; சுரன் இறந் தோர்-சுர நெறியைக் கடந்து சென்றோர்.1 என்ற பாடற் பகுதியில் இக்குறிப்பினைக் காணலாம். வேங்கை மரத்தின் பூக்கள் பல புள்ளிகளையுடைய புலி பின் நிறத்தையொப்பக் கீழே உதிர்ந்து கிடக்கின்றன. வேங்கை மரங்கனின் இடையே நாரத்தை மரங்களும் காணப்பெறுகின்றன. இவற்றினிடையே முசுக்கலைகள் பாய்ந்து தாவுவதால் நாரத்தையின் புதிய மலர்கள் உதிர்கின்றன. இத்தகைய சூழ்நிலையும் தேன் நாறும் இடங்களையும் கொண்டது வேங்கட வைப்பு என்று நமக்குக் காட்டுவார் கவிஞர் பெருமான். மாமூலனார் என்ற செந்நாப்புலவர் 'கோடுயர் பிறங்கல் குன்று பல நீந்தி தேன்துரங்கு உயர்வரை நன்னாட்டு உம்பர் வேங்கடம்' என்று வேங்கடத்தைக் காட்டுவர். இவர் பாடல் பொருள் தேடும்பொருட்டு வேற்றுப் புலம் அடைந்த தலைவன் விரைந்து திரும்பி விடுவான் என்று கூறித் தலைவனது பிரிவால் வருந்தும் தலைவியைத் தோழி தேற்றுவதாக அமைந்துள்ளது. கோடுயர் பிறங்கல் குன்றுபல நீந்தி வேறுபுலம் படர்ந்த வினைதரல் உள்ளத்து ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய இதைச்சுவற் கலித்த ஈரிலை நெடுந்தோட்டுக் கவைக்கதிர் வரகின் கால்தொகு பொங்கழி கவட்டடிப் பொருத பல்சினை உதிர்வை அகன்கட் பாறைச் செவ்வயிற் றெlஇ வரியணி பணைத்தோள் வார்செவித் தன்னையர்
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/36
Appearance