பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககால (வட) வேங்கடம் - (1) பண்ணை வெண்பழத் தரிசி ஏய்ப்பச் சுழல்மரஞ் சொலித்த சுழகலை வெண்காழ் தொடிமாண் உலக்கை ஊழிற் போக்கி உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக் கழிபடு குழிசிக் கல்லடுப் பேற்றி இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதிற் குடவர் புழுக்கிய பொங்கவிழ்ப் புன்கம் மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும் நிரைபல குழிஇங் நெடுமொழிப் புல்லி தேன்துரங்கு உயிர்வரை நன்னாட்டு உம்பர் வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டவர் நீடலர்' -அகம்-393 (கோடு-சிகரம்; பிறங்கல்-பாறை; புலம்-நாடு; ஆறு-வழி; வம்பலர் - புதியர்; காய்பசி - மிக்க பசி; இதை சுவல்-புதுக் கொல்லை; கலித்ததழைத்த, கவர்த்த அடி-பிளவுபட்ட குளம்பு; தெlஇ-குவித்து; வார் செவி - நீண்ட செவி, தன் னையர்-தாய்மார்; பண்ணை-ஒருவகைக் கீரை: வெண்காழ்-வெள்ளிய அரிசி, ஊழில் போக்கிமுறையாக்ச் செலுத்தி; சுரை உரலின்குழி; களிபடு - மண்ணால் செய்த; குழிசி - பானை, இணர்-கொத்து; கடுக்கை-கொன்றை; குடவர்இடையர்: புன்கம்-சோறு, பகுக்கும்-அளிக்கும்; நெடுமொழி. மிக்க புகழையுடைய, தேன் துரங்குதேன் இறால் தொங்கும்; உம்பர்-அப்பாற்பட்ட, இறந்தனர் - கடந்து சென்றனர்; ஆண்டுஆங்கண், நீண்டலர்-தாழ்ந்திருப்பார் அல்லர்! இதில் பொருள்தேடும் பொருட்டுச் சென்ற தலைவன் புல்லி என்பானது நாட்டைக் கடந்து சென்றான் என்று குறிப்பிடும் மாமூலனார் புல்லி ஆண்ட நாட்டைப்பற்றிக்