6 வடவேங்கடமும் திருவேங்கடமும் கூறுகின்றார். சிகரம் உயர்ந்த பாறைகளையுடைய மலை கள் பலவற்றைச் கடந்து செல்லுகின்றான் தலைவன். வழி யில் காடு திருத்திய மேட்டு நிலமாகிய புதுக்கொல்லையில் வரகின் கதிர்கள் தட்டைகளுடன் கொய்து குவிக்கப் பெற் றுள்ளன. அவற்றுள் ஒரு பகுதியின்மீது மாடுகளைவிட்டுத் துவைக்கப் பெற்றதால் உதிர்ந்த வரகு மணிகள் அகன்ற பாறையின்மீது செல்விய இடத்தில் குவிக்கப் பெற்றுள் ளன. அந்த வரகினைத் தாய்மார்கள் உரவில் போட்டுத் திட்டி அரிசியைச் சுளகினால் புடைத்துப் பிரிக்கின்றனர். அந்த அரிசியை மண் பானையில் பெய்து கற்களை அடுக்கி அமைத்த அடுப்பின் மீது அப்பானையை ஏற்றிச் சோறாக்கி அச்சோற்றை நல்ல பசும்பாலுடன் கூட்டி வழங்குவர். அதற்கேற்றவாறு அந்நாட்டில் கறவைப் பசுக்கள் மலிந்து காணப்பெறுகின்றன. அங்குள்ள மலை களின் இடுக்குகளில் தேன் கூடுகள் தொங்குகின்றன . இத்தகைய நாட்டைக் கடந்து தலைவன் சென்றனனாயி னும் அங்கிருந்து திரும்புவதில் காலம் தாழ்த்த மாட்டான் என்று குறிப்படுகின்றார் புலவர் பெருமான். கல்லாடனார் என்ற சங்கப்புலவரும் வேங்கட மலையைக் காம்புடை நெடுவரை' என்று குறிப்பிடுவர். இதுவும்'யாதோ ஒரு நிமித்தத்தின் பொருட்டுத் தலைவன் பிரிவுற்றதனால் வேறுபட்ட தலைமகளைத் தோழி தேற்றுவதாக அமைந்த பாடலாகும். இப்பாடலில் தலைவன் பிரிந்து சென்ற இடத்தைக் குறிப்பிடும், 'அவரே மாஅல் யானை மறப்போர்ப் புல்வி காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர் அறையிறந் தகன்றனர் ஆயினும் நிறையிறந்து உள் ளா ராதலோ அரிதே.' -அகம், 209
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/38
தோற்றம்