பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககால (வட) வேங்கடம் - (1) 7 (அவர்-தலைவர்; மால்-பெரிய, காம்பு-மூங்கில்: நெடுவரை - நீண்ட சாரல்; அறை-குன்றுகள்; இறந்து-கடந்து; உள்ளார்-நினையார்.1 என்ற பகுதியில் வேங்கடமலை குறிப்பிடப் பெற்றுள் ளதைக் காணலாம். ஆய்வு : இனி, இந்த நான்கு சங்கப் புலவர்களும் கையாண்டுள்ள வேங்கடம்பற்றிய சொற்றொடர்களைச் சிந்தித்து ஆய்வோம். பிற்கால இலக்கியம் போலன்றி சங்க இலக்கியத்தில் அதிகமான கற்பனையின்றிக் கவிஞர் கள் இயற்கையை வருணித்திருப்பர் என்பதை நாம் அறிவோம். வரம்பிகந்து உயர்வு நவிற்சியாகக் கூறப் பெறும் இடங்களைச் சங்கப் பாடல்களில் யாங்கனும் காண்டல் அரிது என்பதும் நாம் அறிந்ததேயாகும். மேலே குறிப்பிட்ட நான்கு பாடல்களிலும், சாதாரண மாகக் கவிஞர்களிடம் காணப்பெறும் கற்பனைகூட இல்லை. மலைகளைக் கடந்து செல்லல் மட்டிலும் * குன்றுபல நீந்தி என்று கற்பனை நயம் தோன்றக் கூறப்பெற்றுள்ளதேயன்றி, பிற செய்திகள் உள்ளது உள்ளவாறே இயம்பப்பெற்றிருத்தலைத் காணலாம். ஈண்டு வரை என்பது கோடு அல்லது வரம்பு’ என்று பொருள்படும் சொல்லாகும். இச்சொல்லுக்கு மலை" என்ற பொதுப் பொருளும் பொருந்தலாம். ஆயினும் * வரை', 'கெடுவரை', 'கெடுவரைப் பிறங்கிய வேங்கட வைப்பு’ என்ற சொல், சொற்றொடர்களைக் கூர்ந்து நோக்குங்கால் இவற்றால் குறிக்கப்பெறுவது மலை’ என்ற பொதுப் பொருள் மட்டும் அன்று என்பதும், அது குறிப்பிட்ட ஒரு வகையைச் சேர்ந்த மலைத் தொடர்க ளைக் குறிப்பிடுகின்றது எ ன் பது ம் புலனாகும். 'கெடுவரை' என்பது குன்று அல்லது குன்றம்' என்பத னின்றும் பெரிதும் வேறுபட்டது. பிற்கால இலக்கியங்கள் இச்சொற்களைக் குழம்பிய நிலையில் தாறுமாறாகக்