பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

象 வடவேங்கடமும் திருவேங்கடமும் கையாண்டமையால் இன்றைய வழக்கில் அவை 'ஒரு பொருட் பன்மொழிகளாக வழங்கி வருகின்றன. எ-டு 'சிங்கவேள் குன்றம் என்று திருமங்கை மன்னன் கையாண்டிருப்பதைக் காண்க. ஒன்றோடொன்று ஒழுங்கற்ற நெருங்கிய நிலையில் இன்று நாம் கானும் திருப்பதி மலையைக் குன்றம் அல்லது குன்று" என்று கூறலாம். வேண்டுமானால் மலை’ என்ற பொதுப் பெயராகவுப் சொல்லி வைக்கலாம். ஆயின், எவ்வாற்றா னும் அதை நெடுவரை” என்று சொல்லுவதற்கில்லை. இதனால்தான் மகாகவி பாரதியார் மாலவன் குன்றம்’ என்று கூறினார் போலும்! மேற்கூறிய வருணனை விவரங்களைக் கைவிட்டா லும், திருப்பதி மலையை "வடவேங்கடம் என்று இனம் கண்டு கொள்வதில் மேலும் ஓர் இடர்ப்பாடு உண்டா கின்றது. தமிழகத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள ஒரு சிறிய இடத்தை அதன் இருகடல்கட்கும் இடையே நீண்டு கிடக்கும் நிலப் பகுதியின் வட எல்லையாகக் கூறுதல் யாங்கனம் பொருந்தும்? இதனைப் பேராசிரியர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் இங்ஙனம் கூறுவதன் பொருந்தாமையை முன்னரே நன்கு உணர்ந்து தம்முடைய நூலில் இங்கனம் கூறுவர்:'தமிழர் களின் தலைசிறந்த இலக்கணமாகத் திகழ்வது தொல்காப் பியம் ஆகும். இது காலத்தால் மிகவும் முற்பட்ட நூல். இதில் தமிழகத்தின் எல்லை கூறப்பெற்றுள்ளது. இதில் வட எல்லையாக வேங்கடமும் தென் எல்லையாகக் குமரியும் கூறப்பெற்றுள்ளன (இக்கட்டுரையின் தொடக் கத்தில் காட்டப்பெற்றுள்ள நூற்பாப் பகுதி). அக் காலத்தில் மேற்கிலும் கிழக்கிலும் கடல்களே தமிழகத்தின் எல்லைகளாக அமைந்திருந்தன . ஆகவே, "வடவேங்கடம்’ 1. A History of Tirupati - Part-l