பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககால (வட) வேங்கடம் - (1) I இருப்பைக் கொள்வதற்குச் சிறந்த ஆதாரம் ஆகாது என்பதனையும் ஒப்புக்கொள்வர்'." ஊக்கத்திற்கு மறுப்பு: பேராசிரியர் அய்யங்கார் அவர் களின் ஊகமான முடிவில் சாரம் இருப்பதாகத் தோன்ற வில்லை. சங்கப் பாடல்களை ஆழ்ந்து கற்போர் வி. வினைக் குறிப்பிடும் பல பாடல்களைக் காண்டர். கிட்டத் தட்ட தமிழகத்திலுள்ள எல்லாச் சிற்றுனர்களும் விழவு மலிந்திருந்தனவாகவே கூறப்பெற்றுள்ளன. ஆண்டு தோறும் வரும் விழாக்கள், பருவந்தோறும் வரும் விழாக் கள், சமூக சமய தொழில் அரசியல் பற்றிய பல்வேறு விழாக்கள் ஆண்டுதோறும் மாறி மாறி வந்து கொண்டி ருப்பதைச் சங்கப் பாடல்களில் கண்டு மகிழலாம். 'வதுவை விழவிற் புதுவோர்க் கெல்லாம்' -புறம்-372 என்ற புறப்பாட்டடியால் திருமண விழாக்களும், முந்நீர் விழவின் நெடியோன்' -புறம்-9 என்பதனால் கடல் தெய்வத்திற்கெடுக்கப்பட்ட விழாக் களும் கூறப்பெற்றிருப்பதைக் காணலாம். ஆற்றில் வெள் ளம் பெருகி வருங்கால் மக்கள் அதில் நீராடிப் புதுப் புனல் விழவு கொண்டாடல் பரிபாடலில்" குறிப்பிடப் பெற்றிருப்பதைக் காணலாம். புறநானூற்றில் அரசியல் அல்லது போர் விழாக்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. 4. டிெ-p. 4 5. பரிபாடல் - (6, 7, 10, 11, 12, 16), இவை வையைப் பற்றிய பாடல்கள் .