பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 வடவேங்கடமும் திருவேங்கடமும் போரெதிர்ந் தென்னை போர்க்களம் புகினே கல்லென் பேரூர் விழவுடை யாங்கண்' -புற-84 (என்னை - தலைவன்; பேரூர் - பெரிய ஊர்; விழிவு-போர் செய்தற்கெடுத்த விழா.1 என்ற அடிகளில் இத்தகைய விழாக்கள் குறிப்பிடப் பெற். றிருத்தலைக் காணலாம். குறுந்தொகையிலும் விழாவினைப்பற்றிய குறிப்பு கள் காணக் கிடக்கின்றன. 'விழவு முதலாட்டி' (குறுந்10) என்ற சொற்றொடரைக் காண்க. இது தலைவி இல் லறம் நிகழ்த்த வந்த பின்பே தலைவனுக்குச் செல்வம் உண் டாயிற்று என்பதைத் தெரிவிக்கின்றது. 'உடுத்தும் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே... பெருநலக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற் றென்னும் இவ் வூரே' --குறுந்-295 என்ற பாடலாலும் தலைவி வந்த பிறகே விழவு அயர்தற் குரிய செல்வ நிலை தலைவனுக்கு உண்டாயிற்று என்ப தனைக் காணலாம். 'காதலர் உழைய ராகப் பெரிதுவந்து சாறுகொள் ஊரின் புகல்வேன்' -குறுந்-41 (சாறு-விழா)