பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககால (வட) வேங்கடம் - (1) 15. புகழடைந்திருந்தது என்பதற்கு நம்பகமான சான்றுகள் இருப்பனவாகத் தெரியவில்லை. வேங்கடம்-பெயர் விளக்கம்: சங்ககால வேங்கடத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அதாவது வடவேங்கடத் தைப்பற்றித் தெரிந்து கொள்வதற்கு வேங்கடம்' என்ற சொல்லின் பொருள் துணை செய்கின்றது. வேங்கடம்" என்ற கூட்டுச் சொல் (Compound word) வேம் கடம்' என்ற இரண்டு சொற்களாலாயது. வேம்-கடம்=வேங் கடம் என்றாயிற்று. கடம்' என்பது பாலை நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும். 'பெயன் மழை துறந்த புலம்புறு கடத்துக் கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி துதைமென் து வித் துணைப்புறவு இரிக்கும் அத்தம்' -குறுந்- 174 tதுறந்த - பொய்யா தொழிந்த புலம்பு உறுதனிமை மிக்க, கடம்-பான்ல நிலம்; காய்விடுகாய் வெடிக்கும் பொழுது, கடுநொடி-கடிய ஒலி, துதை-நெருங்கிய; புறவு - புறாக்கள்; இரிக்கும்நீங்கச் செயயும்) என்ற குறுந்தொகைப் பாடலில் கடம்" என்ற சொல் பாலையைக் குறித்தமை காண்க. சிலப்பதிகாரத்திலும், 'கடம்பல கிடந்த காடுடன் கழிந்து' -சிலப். காடுகாண்-அடி 90 (கடம்-காட்டகத்து நெறி! என்ற அடியிலுள்ள கடம் பாலை நிலத்து வழியினைக் குறிக்கின்றதைக் காண்க. கடம்' என்பதற்கு உரையாசி