பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F & வடவேங்கடமும் திருவேங்கடமும் தமிழகத்தின் எடுப்பான வடபுற எல்லைபோல் அமைந்து இடக்கின்றன’’ மிகப் பழங்காலத்தில், இன்று விசாகப்பட்டினத்தருகில் கடல் இருப்பதுபோல், கிழக்குப் பக்கத்தில் மலைகட்கு அருகில் அஃது இருந்தது. இன்று கிழக்குப் பக்கத்தில் கடலுக்கும் மலைகட்கும் இடையிலுள்ள குறுகலான கடற்கரைப்பகுதி தொல்காப்பிய காலத்திற்கு 2,500 அல்லது 3,000 ஆண்டுகட்குப் பிறகு புதிதாக உண்டாகி யிருத்தல் வேண்டும்; அல்லது இன்றுள்ள கடற்கரைக்குக் கிழக்கிலிருந்த மலைகளைக் கடல் விழுங்கியிருததல் வேண்டும். கிழக்குக் கடற்கரையிலும் மேற்குக் கடற் கரையிலுமுள்ள கற்பாறைகளைக் கடல் அடித்துச் சென்றது என்பது சிறுகாக்கைப் பாடினியாரின் பாடற் பகுதியால் உறுதியாகின்றது. கடலுக்கும் மலைக்கும் நேரிட்ட போரினைக் கற்பனை நயந்தோன்றக் கூறும் பாடற்பகுதி இது: வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்திசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு பொறாது கிடந்த நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண் யாப்பின திலக்கணம் அழைகுவன் முறையே’ இதில் வடதிசைக்கண் ஆந்திர நாடு வரம்பாகக் கூறப் பெற்றிருப்பதைக் காணலாம் வடக்கில் கிருஷ்ணை நதிக்கும் துங்கபத்திரை நதிக் கும் வடபெண்ணை நதிக்கும் சற்றுத் தெற்கில் குன்று களும் மலைத்தொடர்களும் சூழ்ந்த நிலப்பகுதி தென்னிந்: தியாவில் மிக வெப்பமாள பகுதியாகத் திகழ்வதை இன் றும் காணலாம். சுற்றுப்புறத்திலுள்ள கற்பாறைகளி லிருந்து அதிகரிக்கப்பெற்றுப் பரவும் கோடைக்காலக்