சங்ககால (வட) வேங்கடம் - (1) } {} கதிரவனின் வெப்பம் 120°லிருந்து 125°F வரையிலும் எட்டுகின்றது. இப்பகுதிகளில் கதிரவனின் வெப்பத் தாக்குதலால் மரிப்பவர்களைப்பற்றியும் நாம் அடிக்கடிக் கேள்விப்படுகின்றோம். கோடைக்காலத்தில் மக்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் இல்லத்தைவிட்டு வெளிக் கிளம்புவதில்லை. நம் உடலிலுள்ள ஈரம் வெப்பமான காற்றினால் உறிஞ்சப்பெறுவதால் நண்பகலில் வறட்சி மேலிட்டு உடலில் ஒருவித எரிச்சல் தோன்றுவதை உணர் கின்றோம். ஆகவே, வறண்ட தன்மையுடைய இப்பகுதி சங்க நூல்களில் குறிப்பிடப்பெறும் வேங்கடம்' என்ற நாட்டுப் பகுதியைப் பெரும்பாலும் லத்திருப்பதை அறிய லாம். அண்பைக் காலத்தில் ஏற்பட்ட இருப்பூர் திப்பாதை களின் காரணமாக இப்பகுதியிலுள்ள ஒரு சில நகரங் களைத் தவிர, ஏனைய பகுதிகள் யாவும் இன்றும் பிற் போக்குத் தன்மையுடையனவாக இருப்பதையே காண்கி றோம். அண்மைக்காலம் வரையில் இப்பகுதி கிட்ட தட்ட ஆண்டு தோறும் வற்கடத்தாலும் கொள்ளை நோய்களா லும் பீடிக்கப் பெற்றிருந்தது. ஏதோ மழைக்காலத்தில் இப் பகுதியிலுள்ள ஆறுகளிலும் ஓடைகளிலும் வெள்ளம் பெருகிவழிந்தாலும் சமவெளிப்பகுதியைவிட அது மிகவும் தாழ்ந்திருப்பதால் ஆறுகள் பாசனத்திற்குப் பெரும்பாலும் பயன்படுவதில்லை. ஆயினும், தற்காலத்தில் சிறு சிறு அணைகளை அமைத்து நீர்த்தேகத்தை உண்டாக்கும் திட்டங்களால் இப்பகுதியைச் சார்ந்த பெரும்பாலான இடங்கள் கணிசமான அளவுக்கு மாற்றங்கள் அடைந்து வருகின்றன. நாடு விடுதலை அடைந்த பிறகு இப்பகுதி யில் நல்ல முன்னேற்றங்களைக் காணலாம்.
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/51
தோற்றம்