பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககால (வட) வேங்கடம் - (2) 2} (வறப்ப - வரட்சியையுடைய, அகைய - எரிய, நீடிய-மிக்க நனந்தலை-அகன்ற இடம்; மருப்புகொம்பு, வேங்கை-வேங்கைப்புலி, வெருவருஅச்சந்தரும்; உயங்கி-வருந்தி; தேம்பி-வாடி: சிறை-பக்கம்; அதர-நெறிகளையுடைய, பகடுஎருது; உயிர்ப்ப இளைப்பாற; நீந்தி-கடந்து; முர்ம்பு-வன்னிலம்; குழித்த-தோண்டின் கூவல்கிணறு, வம்பலர்-புதியர்; அசைவிட தளர்ச்சி நீங்க; புடையல்-கலிக்கின்ற} என்ற பாடலில் நாட்டின் இயற்கையமைப்பு கூறப் பெறுகின்றது. எங்கும் நிலம் நீரின்றிக் கிடக்கின்றது. மலைச்சுனைகள் யாவற்றிலும் நீர்வற்றி விட்டது. காய் கதிர்ச் செல்வனிடமிருந்து கனன்று வரும் கதிர்கள் குன்று களின் உச்சியில் நெருப்பைக் கக்குகின்றன. அகன்ற பக்க மலைகளில் மூங்கில்கள் காய்ந்து கரிகின்றன. வேங்கைப் புலிகளையும் கொல்லும் திறம் வாய்ந்த மாபெரும் களிறு கள் தம்முடைய பெரிய துதிக்கைகளை நிலவுகிற மருப்பு களில் சுற்றிக் கொண்டு ஆற்றலிழந்து தளர்ந்த நிலையில் தம் பிடிகளுடன் அங்குமிங்கும் இலைகளினிடைக் காணப் பெறும் மரங்களின் நிழல்களில் தங்கிக் கிடக்கின்றன. உப்பு மூட்டைகளை ஏற்றியுள்ள வண்டிகளுடன் செல்லும் உமணர்கள் எருதுகளை வண்டிகளினின்றும் அவிழ்த்து இளைப்பாற விடுகின்றனர். வன்னிலத்தை இடித்து அகன்ற இடத்தில் தோண்டப்பெற்ற கிணறு களில் வழிப் போக்கர்களின் நீர்விடாயைத் தீர்க்கும் அளவுக்குக்கூட நீர் ஊறுவதில்லை. குன்றுகளையுடைய இத்தகைய புல்லி நாட்டில் மக்கள் செல்லுவதற்கே அஞ்சு கின்றனர். இன்றும் அந்நிலையே காணப்பெறுகின்றது. பதினேழு ஆண் டு க ட் கு முன்னர் (1974) கூடுருக்கருகிலுள்ள வித்யா நகர்க் கல்லூரிக்குப் பல்கலைக்கழகப் பணியாகச் சென்றிருந்தபொழுது உப்பு விற்கும் உமணர்களைக்