பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககால (வட) வேங்கடம் - (2) 2。 விண்ணுற வோங்கிய பணியிருங் குன்றத்து தண்கதிர் திகிரி உருளிய குறைத்த அறைஇறந் தவரோ சென்றனர் -அகம்-281 (உருளிய - தடையின்றிச் செல்ல; கு ைற த் தபோழ்த்து வழியாக்கின; அறை-பாறை) என்ற அகப்பாட்டடிகள் கவிதை நயந்தோன்ற இப்பகுதி யினை வருணிக்கின்றன. காய்கதிர்ச் செல்வனாகிய திகிரி தான் செல்வதற்கு வழி அமைக்கும்பொருட்டு பனியையுடைய சிகரங்களின் தலை துணித்து விட்டதாகக் கூறப்பெறுகின்றது. இன்னும் இரண்டு பாடல்கள் இப் பகுதியை, 'கோடுகொள் அருஞ்சுரம்' (அகம்-263) என்றும் அருஞ்சுரக்கவலை (அகம்-359) என்றும் குறிப்பிடுகின்றன. இப்பகுதியினைப் பற்றிக் கூறும் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகைப் பாடல்கள் யாவும் பாலைத்திணை பற்றியனவாகவே இருத்தல் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. இவை ஏதோ ஒரு முறையில் பாலைக்கூறுகளில் ஒன்றினைக் குறிப்பிடுவனாகவே அமைந்து உள்ளன. இந்த வேங்கடப் பகுதியில் செழிப்பான இடங்களே இல்லை என்று கூற முடியாது. புறநானூற்றுப் பாட லொன்றில் கல்லாடனார் என்ற புலவர், 'தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும் விண்டு வனைய விண் தோய் பிறங்கல் முகடுற உயர்ந்த நெல்லின்... வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென -புறம்-391