பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2酸 வடவேங்கடமும் திருவேங்கடமும் வேங்கடம் என்ற பகுதி பாண்டிநாட்டின் வட எல்லை யாக நீண்டு மேற்குக் கடற்கரையை எட்டுகின்றது. "...............வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் -அகம்-27 என்ற அகப்பாடற்பகுதி பாண்டிய அரசன் இந்த வேங்க டம் உள்ள திசையினின்றும் வேழங்களைக் கொண்டான் என்று குறிப்பிடுகின்றது. 'நேரா வன்தோள் வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாட்டு உள்ளதை அயிரியாறு இறந்தன ராயினும் மயரிறந்து உள்ளுப தில்ல' -அகம்-253 (பேர் இசை - பெரும்புகழ்; எருமை - ஒர் ஊர்: உள்ளதை-உள்ளதாகில்; அயிரி-ஒர் ஆறு; இறந் தனர்-கடந்து சென்றனர்; மயர் இறந்து-ம்றவி யற்று; உள்ளுப-நினைப்பர்) என்ற இன்னோர் அகப்பாட்டின் பகுதி கர்நாடகத் திலுள்ள அயிரி என்ற ஆற்றைக் கடந்து சென்று பாலை நிலத்தை அடைந்தனனாகக் குறிப்பிடுகின்றது. அயிரியாற் றிற்கு அப்பாலுள்ள பகுதி பாலை நிலம் அல்லது வேங் கடம் என்பதாக இப்பாடல் வெளிப்படையாகக் குறிப் பிடாவிடினும், அஃது அத்தகைய நிலம் என்பதாக நினைக் கச் செய்கின்றது. ஆயினும்,