பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககால (வட) வேங்கடம் - (2) 27 'கழை அமல் சிலம்பின் வழைதலை வாடக் கதிர்கதங் கற்ற ஏகல் நெறியிடைப் பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக் கான மஞ்ஞைக் கமஞ்ளுல் மாப்பெடை அயிரியாற் றடைகரை வயிரின் நரலும் -அகம்-177 (கழை-மூங்கில்; அமல்-நிறைந்த, சிலம்பு-பக்க மலை; வழை-சுரபுன்னை; தலை-உச்சி, கதிர்(ஞாயிற்றின்) கதிர்; கதம்-சினம்; ஏகல்-பெருகிய கற்கள் நசைஇ-விரும்பி, வயிர்-ஊதுகொம்பு; நரலும்-ஒலிக்கும்) என்ற இன்னொரு பாடற்பகுதி இதனைத் தெளிவாக்கு கின்றது. இதில் இன்னொரு தலைவன் அயிரியாற்றைக் கடந்து காடுகளுக்கு அப்பால் செல்லுகிறான். அவன் செல்லும் நெறியிலுள்ள பக்க மலைகளில் மூங்கில்கள் நிறைந்துள்ளன. அங்குள்ள வெப்பத்தினால் சுரபுன்னை வாடிக் கரிந்த நிலையிலுள்ளது. வழியிலுள்ள கற்குவியல் கள் கதிரவனின் வெப்பத்தை ஏற்று அதனை எல்லாப் பக் கங்களிலும் பரப்புகின்றன. இந்த அயிரியாற்றைத் துங்க பத்திரையின் உபநதியாகக் கொள்வர் டாக்டர் கிருஷ்ண சாமி அய்யங்கார் அவர்கள்?. இந்நதி கன்னடத்தில் 'ஹேகரி என வழங்குகின்றது.) இந்தத் துணை நதி மேற் குத் தொடர்ச்சி மலையின் கீழ்ப்பகுதியில் உற்பத்தியாகிக் கர்நாடகப்பகுதியின் வடஎல்லை வழியாகப் பாய்கின்றது. இங்கனம் கிழக்குக் கடற்கரையில் தொடங்கும் வேங்கடம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரையில் நீண்டு செல்லுகின்றது. இம்மலையைக் கடந்து சென் றால் மேற்கிலுள்ள கடல் தென்படும். 2. A History of Tirupati Part - İ!