பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露& வடவேங்கடமும் திருவேங்கடமும் எருமை நாடு: இனி, மேலே சுட்டிய அகப்பாட்டில் (அகம் 253) குறிப்பிட்ட எருமை நன்னாடு இன்னதென்ன அறிந்து .ெ கா ள் வ. து இன்றியமையாததாகின்றது. மைசூரில் கிடைத்த கன்னடக் கல்வெட்டுகளாலும் (E. C. Car Vol. X Ch. 20) SIG3 F)L-5Slóð Saðl — $5 தமிழ்க் கல்வெட்டுகளாலும் (AR for 1907 Part 1) எருமை நன்னாடு என்பது கர்நாடக மாநிலம் ஆகும் என்று அறியக்கிடக்கின்றது." தமிழில் எருமை (விலங்கு) என்பது வடமொழியில் மகிஷம் என வழங்கும். புராணக் கதைப்படி மகிஷா சுரன் என்பவன் நாட்டில் பேரழிவினை ஏற்படுத்திய மாபெரும் அசுரனாவான். அரசரின் அரண்மனைக்கருகி லுள்ள சாமுண்டி மலையிள்ள சாமுண்டீஸ்வரி என்ற தேவதை அந்த அசுரனைக்கொன்று நாட்டைத் தீங்குகளி னின்றும் மீட்டுவித்ததாகக் கதை. அந்த நகர் மகிஷா சுரனின் ஆட்சியின் கீழிருந்தால் மகிஷாசுரனுார் என்று வழங்கி வந்தது. இது வெள்ளைக்காரரால் மைசூர் என வழங்கப்பெற்று அப்பெயரே அம்மாநிலத்தின் பெயராக வும் நிலைத்து விட்டது. அண்மையில் அம்மாநில அரசு, அதனை அதன் பழம் பெரும் பெயராகிய கர்நாடகம் என வழங்கச் சட்டமும் இயற்றியதை நன்கு அறி வோம். எனவே, மகிஷம் என்பது பழைய பெயராகிய ‘எருமை என்பதன் மொழிபெயர்ப்பாகும் என்பதை நாம் அறிதல் வேண்டும். இடைக்காலத்தில் அப்பெயருக்குப் புராண வழக்கும் ஏற்பட்டுச் சமயச் சார்பும் உண் டாயிற்று. 3. புறம்-273. ஒளவை துரைசாமி பிள்ளை உரை கண்டு தெளிக். 4. நாடு விடுதலை அடைந்த பிறகு திருவாங்கூர் கேர ஊம் ஆயிற்று; இதலுங்கு நாடு ஆந்திரம் ஆயிற்று; சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆயிற்று.