பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wo - 叠 ג' சங்ககால (வட) வேங்கடம் , (2) 33 சங்ககாலத்தில் அந்நாட்டிற்கு எருமை நன்னாடு' என்று வழங்கியதை அகநானூற்றால் (அகம்-253) அறி கின்றோம். 'நாரறி நறவின் எருமை யூரன்' 'எருமை குடநாடு’ -அகம்-115 என்ற சங்ககால வழக்காறுகள் இதனை உறுதிப்படுத்தும்; இவை சங்ககாலத்தில் மைசூருக்கு வழங்கப்பெற்ற பெயர்களாகும். இவற்றுள் எருமை குட நாடு’ என்ற தொடர் கவனத்திற்குரியது. தொல்காப்பியம் என்ற தொல்லிலக்கணப்படி செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத் தில் செந்தமிழ்மொழி வழங்கி வந்தது. உரையாசிரியர் கள் இந்த நாடுகளின் பெயர்களையும் கூறியுள்ளனர். தென்பாண்டி குட்டம் குடங்கற்கா வேண் பூழி பன்றி யருவா வதன் வடக்கு-நன்றாய சீத மலாடு புனல்நாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண். என்ற நன்னூல் விருத்தியுரையில் (நூற்பா-2 3) காணப் பெறும் வெண்பா இப்பன்னிரு நாட்டின் பெயர்களையும் குறிப்பிடுவதை அறியலாம். இவற்றுள் குடநாடு’ என்ற பெயர் மேற்கு நாடு’ என்று பொருள் தரும் தொட ராகும். கேரளமும் கர்நாடகமும்-தமிழகத்தின் மேற்குத் திசையில் உள்ளவை. ஆகவே, குடநாடு என்பது இந்த இரண்டும் சேர்ந்த நாடடையோ அல்லது தனித்தனி யாக இவற்றுள் ஒன்றையோ குறிப்பிடும் தொடர் என்றா கின்றது. எனவே, சேரர் குடநாட்டினின்றும் பிரித்தறிவ தற்காகவே எருமை குடநாடு’ என்ற தொடர் வழங்கப்