பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வடவேங்கடமும் திருவேங்கடமும் பெற்றது என்பதை நாம் அறிதல் வேண்டும். இவ்வாறு தொல்காப்பியர் காலத்திலேயே மைசூர் பன்னிரு நாடு களில் ஒன்றாக அமைந்து தமிழ் வழக்கும் பெற்றது. இக்காலத்தில் இங்கும் கேரளத்திலும் செந்தமிழ் பயின்று வந்தது. சங்ககாலத்திலும்கூட மைசூர்ப் பகுதியில் செந்தமிழ் வழங்கலாயிற்று என்ற உண்மை இந்நாட்டை பற்றிய பாடல்களைச் சங்க இலக்கியங்களில் சேர்க்கப் பெற்றமையால் அறியக்கிடக்கின்றது புறநானூற்று: பாடல்களும் (புறம்-273, 303) அகநானூற்றுப் பாடலும் (அகம்-73) எருமை வெளியனாராலும் இன்னொரு பாட ல் (அகம்-72) அவர் திருக்குமாரர் எருமை வெளிய னார் மகனார் கடலனார் என்பவராலும் பாடப். பெற்றமை இவ்வுண்மைக்கு மேலும் அரணாக அமைகின் றது. தொல்காப்பியர் காலத்தில் இப்பகுதியில் பயின்று வந்த செந்தமிழ் காலப்போக்கில், பல நூற்றாண்டுகளில், கன்னடமாக மாறியது. இவ்வரலாற்றை நினைந்தே பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும் தமது மனோன்மணியத் தில் தமிழ்த் தாய் வாழ்த்தில் கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும், உன் உதரத்து உதித்து எழுந்து ஒன்று பல ஆயிடினும் என்று பாடி வைத்தார் என்று. கருதலாம். இதுகாறும் கூறியவற்றால் தொல்காப்பியர் காலத் தில் மைசூர்ப்பகுதி (தற்காலக் கர்நாடகம்) தமிழ் கூறு நல்லுலகத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது என்பத னையும், அதன் வட எல்லையில் அயிரியாற்றினை அடுத்து "வடவேங்கடம் இருந்தது என்பதனையும், அறிகின் றோம். ஆகவே தமிழ்கூறு நல்லுலகத்தின் வட எல்லை யாக வழங்கிய வேங்கடம் (வடவேங்கடம்) தென்னிந் தியத் தீபகற்பகத்தின் வடக்குப் பகுதியில் கீழ்க் கோடியி லிருந்து மேற்கோடி வரை பரவியிருந்த பகுதியாகும் என் பதனைத் தெளிவாக அறிகின்றோம்.