பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வட) வேங்கடத்தை ஆண்ட அரசர்கள் నేటి என்ற மதுரைக் கணக்காயனாரின் கூற்றுகளால் மேற் கண்ட செய்திகளை அறியலாம். இதனால் யாதோ ஒரு வகையால் புல்லி பாண்டியர் குலத்தோடு தொடர்புடைய வனாதல் தெரிகின்றது. புல்லி ஆண்ட வேங்கட நாடு வேழங்கள் மலிந்த நாடு, வேங்கடத்தில் கொண்ட வெங் கோட்டு யானைகளையுடையது பாண்டியர் படை என்று மதுரைக் கணக்காயர்கூறுவதையும் காணலாம். புல்லி ஆண்ட நாட்டைச் சார்ந்த வீரர்கள் தாம் வாங்கும் பொருள்களுக்கெல்லாம் யானைகளையும் யானைக் கோடுகளையுமே விலையாகக் கொடுப்பர். இந்த வீரர்கள் தம் நாட்டையடுத்த காட்டினுள் புகுந்து பெண் யானைகள் வருந்துமாறு அவற்றின் கன்றுகளைக் கைப்பற்றுவர். அவற்றை வெண்கடம்ப மரக்கிளையினின் றும் உரித்தெடுத்த நாரால் ஆன கயிற்றால் கட்டிக் கொணர்ந்து, தம் ஊரிலுள்ள கள்ளுக்கடைகளின் வாயிலி டத்தே தாம் உண்ட கள்ளின் விலையாகக் கட்டிப் போவர். கறையடி மடப்பிடி கானத் தலறக் களிற்றுக்கன் றொழித்த உவகையர் கவிசிறந்து கருங்கால் மாஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து பெரும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் நறவுகொடை நல்லில் புதவுமுதற் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி. -அகம்-83 (கறை-உரல், பிடி-பெண் யானை, ஒழித்த-பிரித் துக் கொண்ட கலி-செருக்கு கருங்க்ால் மரம்கடம்பமரம்; கொழுகொம்பு - வள வியகிளை; பெரும்பொளி-பெரிதாக உரித்த; வெள் நார்வெள்ளிய நார்; பூட்டி-கட்டி; துடங்கும். அசை வ.தி.-3