பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வட) வேங்கடத்தை ஆண்ட அரசர்கள் 5 வேழம் வீழ்த்தும் வன்கண்மையுடையாரது செயல் களைக் கூறிய சங்கப் புலவர்கள் வலக்கை இடக்கை அறி யாத ஆயர்களின் செயல்களையும் புலப்படுத்தியுள்ளனர். 'கோடுயர் பிறங்கல் குன்றுபல நீந்தி வேறுபுலம் படர்ந்த வினைதரல் உள்ளத்து ஆறு செல் வம்பலர் காய்பசி தீரிய குடவர் புழுக்கிய பொன்கவிழ் புன்கம் மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும் நிரைபல குழிஇய நெடுமொழிப் புல்லி' -அகம்-393 (கோடு-சிகரம்; பிறங்கல்-பாறை, புலம்-நாடு; படர்ந்த-அடைந்த வம்பலர்-புதியர்; காய்பசி-மிக்க பசி; தீரிய-ஒழிய, குடவர்-இடையர்; புழுக்கிய-ஆக்கிய புன்கம்-ச்ோறு; பகுக்கும். அளிக்கும்; நிரை-பசுக்கூட்டம்; குழிஇய-மிகப் பெற்ற1. என்ற மாமூலனார் பாடலில் அந்நாட்டு ஆயர் தம் நாடு நோக்கி வருவாரை விருந்தாக ஏற்று வரகு அரிசியால் அட்ட சோற்றை ஆவின் பாலோடு கூட்டி அவர்கட்கு அளித்து வரு விருந்து பார்த்திருக்கும் பண்புடையாளர் என்று போற்றியுரைக்கின்றார். அவரே இன்னொரு பாடலில் கூறுவதையும் கேட்போம்: 'பயந்தலைப் பெயர்ந்து மாதிரம் வெம்ப வருவழி வம்பலர் பேணிக் கோவலர் மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் புல்லி நன்னாடு' -அகம்-31