பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛秒 வடவேங்கடமும் திருவேங்கடமும் என்பவற்றால் இவன் பரம்பரையோருடைய பெருமை புலப்படும். செங்கோன்மையால் சிறப்புமிக்க இவன் ஆட்சியில் அளியும் தெறலும் எளிய மூனறயில் நடந்தன. இவனைப் பகைத்து மலைந்த மன்னர்களின் மன்றங்கள் பாழ் பட்டன; இவனை நயந்தவர் நாடுகள் நன்பொன்பூப்ப நலமிகுந்தோங்கின. நாடோறும் வேந்தர் பலரும் பல்வேறு வகையில் பணிந்து, நட்புக்கொள்ள வேண்டி நயந்திசி னோரும், துப்புக் கொள வேண்டித் துணையிலோரும், கல்வீழ் அருவி கடற்படர்ந்தாங்கு' இவன்பால் வந்த வண்ணம் இருந்தனர். இவர்கட்கு வேண்டுவனவற்றை அருளிய இப்பெருமகன் அரசியலின் செம்மை குறித்து அவர்கட்குச் சில அறிவுரைகளும் வழங்கினன். எ-டு, 'அரசியலை ஒரு சகடமாக உவமித்து, சகடத்தை உகைப் பவன் உகைக்குந் திறத்தை மாண்புற அறிந்தானாயின், அஃது இடையூறு சிறிதுமின்றி இனிது செல்லும்; அத்திறம் அறியானாயின் நெறியல்லா நெறியிற் சென்று சேற்றில் அழுந்தி மிக்க துன்பத்துக்குள்ளாவன்; அவ்வாறே அரசியலை நடத்தும் வேந்தன் அரசியல் முறை யைத் திறம்பட அறிந்தானாதல் வேண்டும்; அதனால் நாடு நலம் பெறும்; அவனும் சீர் பெறுவன்; அறியானாயின் உட்பகை புறப்பகைகளாகிய சேற்றில் அழுந்திக் கெடுவன்’ (புறம்-185) என்று அறிவுறுத்துவானாயினன். ஆதனுங்கன் ஆதன் அழிசி, ஆதன் அவினி என்பாரைப்போல் ஆதன் நுங்கனும் ஒரு குறுநில மன்னன். வேங்கடமலையும் அதனைச் சூழ உள்ள நாடும் இவனுக்கு உரியவை. இவனுக்குப்பின் வந்தவனே வேட்டுவர் தலைவனான புல்லி என்பான். புல்வி ஆதனுங்கனுக்கு முற்பட்டவன் என்று கருதுபவரும் உளர். வேங்கடத்தில் இப்போது திருமால் கோயில்