பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இன்றைய திருவேங்கடம்" இன்று கற்றறிந்த புலவர்களும் பொதுமக்களும் திருப்பதி மலையையே வட வேங்கடம்’ என்று கருதுகின் றனர். தேசியகவி பாரதியாரும் வடவேங்கடத்தை * வட - மாலவன் குன்றம்’ என்றே வழங்குவர். இதனை, 'நீலத் திரைகடல் ஓரத்திலே-நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு’’ -பா. க. செந்தமிழ்நாடு-5 என்று தமிழ்நாட்டு எல்லையை வகுத்துக் காட்டும் பாட லில் கண்டு தெளியலாம். தொல்காப்பியப் பாயிரத்தில் கூறப்பெற்ற தமிழ் கூறு நல்லுலகமே பாரதியின் கருத் தில் புதிய வடிவங்கொண்டு நிற்பதை எளிதில் கண்டு தெளியலாம். தொல்காப்பியப் பாயிரமேயன்றி சங்க இலக்கியங்களில் வேங்கடத்தைப்பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன என்று முன் கட்டுரைகளில் காட்டப் பெற்றது. இந்தக் கு றி ப் புக ைள த் தெளிந்து சங்கப் பாடல்களில் வேங்கடம்பற்றிய வருணனைகளைக் கொண்டு சீர் தூக்கி ஆராயும்போது திருப்பதி மலை

  • சப்தகிரி (செப்டம்பர்-1990) யில் வெளிவந்தது.