金 வடவேங்கடமும் திருவேங்கடமும் குறிப்பிடப் பெற்றது. அதனை நினைவு கூர்வது ஈண்டுப் பொருத்தமுடைத்து. பக்தியியக்கம் செல்வாக்குப் பெற்ற இடைக் காலத்தில் வேங்கடம் என்ற சொல்லும் புதுப் பொருளைப் பெற்றுவிட்டது. ஈண்டு திருவாய்மொழியி லுள்ள ஒரு பாசுரத்தை ஆய்வது பொருத்தமாகின்றது. வேங்க டங்கள் மெய் மேல்வினை முற்றவும் தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார் வேங்க டத்துறை வார்க்கு நம'தெனல் ஆங்க டமை.அ துசுமந் தார்கேட்கே’ --திருவாய் 3.3:6 (வேம். வெந்துபோம்; கடங்கள்-பாவங்கள்; மேல்வினை-இனி விளையச்கூடிய பாவங்கள் (ஆகாமியம்) முற்றவும்-சகல பாவங்களுக்கும்; நல்லன-கைங்கரியங்கள்; நம-நம: (வடசொல்) சுமந்தார்க்கு-வசிக்கிறவர்கட்கு) ஆழ்வார்கள் காலம்வரை வேம்-வெந்துபோம், கடங்கள் பாவங்கள்’ என்று வழங்கின. தன்னை அடைந்தவர்களுடைய பாவம் அனைத்தையும் ஒழிப்ப தனால் இத்திவ்விய தேசத்தை வேங்கடம்" எனக் கூறத் தொடங்கினர். அவர்கள் காலத்திற்குப் பிறகு வேம்' என்ற சொல் எரித்தல்' என்ற பொருளைக் கொண்டி ருந்த மரபு மறைந்து வேம்' என்ற சொல் 'பாவம்' என்ற பொருளை ஏற்றது. பக்தியியக்கம் ஓங்கியிருந்த காலத் தில் சமயக் கருத்துகளும் மக்கள் மனத்கில் நுழையத் தொடங்கி அதனால் அவர்கள் மனநிலை விரிந்த காலத் தில், மனித மனம் ஏற்கனவே தான் படைத்த சொல் லுக்குப் புதுப் பொருளையும் சேர்க்கத் தொடங்கியது. 'பாவமும்' ஆன்மாவுக்குத் தாங்க முடியாத வெப்பத்தைத் தருவதாகும் என்று மனம் கற்பிக்கத் தொடங்கியது. எனவே வேம்' என்ற சொல் பாவம்' என்ற பொருளை
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/80
தோற்றம்