பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* இன்றைய திருவேங்கடம் 49 யும் ஏற்க வேண்டியதாயிற்று. அங்ஙனமே, கடம்’ என்ற சொல்லும் புதுப்பொருளை ஏற்றது. "கடம்" என்ற சொல் சங்க காலத்தில் பாலை நிலத்தைக் குறிக்கும் சொல்லாக வழங்கியமை முன்னர்க் குறிப்பிடப் பெற்றது. உரையாசிரியர்கள் அதற்கு அருஞ்சுரம்' என்று பொருள் வழங்கியதும் சுட்டிக் காட்டப் பெற்றது. இடைக்காலத்தில் கடம்' என்ற சொல் எரித்தல் என்ற பொருளை ஏற்றது. வேங்கடம்" என்ற கூட்டுச்சொல் பாவங்களை எரித்தல் என்ற பொருளில் வழங்கி மேலும் அது பாவங்களை எரிக்கும் இடம் என்றும் வழங்கத் தொடங்கியது. சங்க காலத்தில் இயற்பெயராக வழங்கிய வேங்கடம் இடைக் காலத்தில் காரணப் பெயராக மாறத் தொடங்கியது; ஆழ்வார் பாசுரத்திலும் இப் பெயராகவே ஏறிவிட்டது நம் போன்று கற்றறிந்தவர் கள் இச் சொல்லாராய்ச்சியில் ஈடுபட்டுத் தலையை உடைத்துக் கொள்ளுகின்றோம். ஆனால் நாடோறும் பல்லாயிரக் கணக்கில் திருத்தலப்பயணமாக வரும் பக்தர் கள்-கற்றவர்கள் கல்லாதவர்கள் உட்பட-அனைத்தையும் மறந்து வேங்கடத்தைத் தமது பாவங்களையெல்லாம் தீயினில் துாசாக எரிக்கும் இடமாகவே கருதுகின்றனர். இன்னும் சிலர் வேங்கடம்" என்ற திவ்விய தேசம் அழிவில்லாத ஐசுவர்யங்களை அளிக்கும் இடமாகவும் கருதுகின்றனர் (இதுவராக புராண விளக்கம் ஆகும்). வேண்டுவார்க்கு வேண்டுபவற்றைத் தரும் கலியுக வரதன்' எழுந்தருளியிருக்கும் இடமாகக் கருதும் மனங்கட்குச் சொற்களுக்குப் புதிய பொருளைச் சேர்த்துக் கொள் வதில் ஒரு சிரமமும் இருக்க முடியாதல்லவா? எனவே இவர்கள் கருத்திற்கு ஏற்ப வேம்’ என்பது அழிவின்மை’ கடம்" என்பது ஐசுவரியம்' என்ற பொருள் வழங்கத் 1. சங்ககால (வட) வேங்டம் - (1) காண்க. வ, தி.-4