பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய திருவேங்கடம் 莎夏 லுக்கு நாதன் ஆகின்றான். நாதன் ஈண்டு ஆன்மாவைக் குறிக்கின்றது. அத்துடன் நில்லாமல் ஆன்மாவுக்கும் ஆன்மாவாக விளங்கும்-அந்தர்யாமியாக இருக்கும்-பர மான்மாவையும் குறிக்கின்றது. வைணவ தத்துவத்தில் சித்தும் (உயிரும்) அசித்தும் (உடல், உயிரற்ற பொருள் களனைத்தும்) எம்பெருமானுக்கு உடலாக இருப்பதாகக் கூறப்படும். இப்போது எல்லோர் மனத்திலும் வேங்கடம்" என் னும் பெயர் ஒரு சொல்லாகவே தென்படுகின்றது. சொல் விலக்கணத்தின் அடிப்படையில் அமைந்த பெயரின் முக் கியத்துவமும் நாளடைவில் மறைந்துவிட்டது. ஆயினும் ஒரு சொல் நீர்மைத்தாக வழங்கும் பெயரில் பழங்காலத் தின் பெருமையும் சிறப்பும் சேர்ந்தே மிளிர்கின்றது, அப் பெயரில் அச்சத்தை விளைவிக்கும் பழங்கூறு அடியோடு இல்லாதொழிந்தது. வடஎல்லையாக வழங்கும் வட வேங்கடம் என்ற அடையுடன் கூடிய பெயரும் வழக்கற் றுப்போய் வைணவ சம்பிரதாயத்தின் அடையாகிய திரு' என்பது சேர்ந்து திருவேங்கடம்' என்று வழங்கி வருகின் றது. திரு” என்பது என்னென்ன பொருள்களிலெல்லாம் வழங்கி வருகின்றதோ அப்பொருள்களெல்லாம் வேங் கடம் என்ற பெயருடன் சேர்ந்து அது ஊருக்குப் பெரு மையையும் சிறப்பினையும் அளித்துவிட்டது. மலையின் பெயரில் ஏற்பட்ட இம்மாற்றம் காலப்போக்கில் இம் மலைக்கு ஏற்பட்ட மாற்றத்துடன், எல்லாவகையிலும் பொருந்துவதாக அமைந்துவிட்டது. திருப்பதி புகழோங்கிய காலம்: வட எல்லையின் முக்கிய எல்லைக் குறியாகத் (Land Mark) திகழும் வட வேங்கடம் (திருப்பதி) எக்காலத்தில் தமிழர்கள் யாவரும் சிறப்பாகக் கருதும் இடமாக அமைந்தது என்பதைச் சிந் திப்போம். திருப்பதி மிகவும் புகழடைந்தது, சமயச்