பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வடவேங்கடமும் திருவேங்கடமும் என்பதை நிலைநாட்டவே இத்தகைய இடைச் செருகல் யாரோ ஒருவரால் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்று கூறி தன் முடிவுக்கு அரண் அமைத்துக்கொள்வர். பிள்ளையவர்களின் முடிவு பற்றி அடியேனின் கருத்து: பிள்ளையவர்களின் மு டி வு சரியானது என்பதை எந்த ஆய்வு மனமும் உடனே ஒப்புக் கொள்ளாது. மேற்குறிப்பிட்ட சிலப்பதிகாரப் பகுதி யினை அடுத்து மதுரைக்குச் செல்லும் வழியை விளக்கிய பின்னர் அடுத்து வரும், நீள்நிலம் கடந்த நெடுமுடி அண்ணல் தாள் தொழு தகையேன் போதுவல்" என்ற அடிகளால், மாங்காட்டு மறையோன் தன்னைத் திருமாலடியான் என்று குறிப்பிடுகின்றான். திருமாலின் திவ்விய தேசங்கட்குத் திருத்தலப்பயணமாகப் புறப்பட்ட வன் என்றும் சொல்லிக் கொள்ளுகின்றான். மாங்காட்டு மறையோன் கோவலனுக்கு மதுரைக்குச் செல்லும் வழியை விளக்கிய பின்னர் கோவலன் மறையோனை வினவியதற்கு மறுமாற்றமாக வருகின்றன திருவரங்கம், திருவேங்கடம் இவற்றின் வருணனைகள். மாங்காட்டு மறையோன் தான் பார்க்க வேண்டிய திவ்விய தேசங், களைப்பற்றி முன் சென்று திரும்பியவர்களிடமிருந்து தெரிந்து வந்திருத்தல் கூடும். ஒரு பக்தன் பிறிதொரு பக்தனிடம் திருத்தலங்கள் பற்றிய செய்திகளைக் கூறுங் கால் வழிகளை மட்டிலும் தான் கூறுவான் என்று கருதுதல் தவறு. அவன், தான் செவி வழியாகக் கேட்டவற்றையும், தான் நேரில் சென்று காணுங்கால் உள்ளக் கிளச்சியால் தன் மனத்தில் எழுந்த கருத்துகளையும் கூட்டியும் குறைத் தும் கூறியிருத்தல் கூடும். எப்பொழுதும் தொலைவி 10. சிலம்பு - காடுகொண் - அடி (148-49)