§ {} வடவேங்கடமும் திருவேங்கடமும் னைகளும் மாங்காட்டு மறையோனின் வாயில் வைத்துப் பேசப் பெற்றதாலும் அதனைக் கூறுபவர் இளங்கோ அடிகளே யாவர் என்பதை நாம் மறக்கலாகாது. திருவரங் கத்தைக் குறைவான அடிகளிலும் திருவேங்கடத்தை அதிக மான அடிகளிலும் கூறியவர் இளங்கோவடிகளேயன்றி மாங்காட்டு மறையோன் அல்லன். எனவே ஒன்றன் குறைவையும் மற்றதன் நிறைவையும் காரணமாகக் கொண்டு நிறைவாகவுள்ளதை இடைச் செருகலாகக் கொள்ளல் எவ்வாற்றானும் பொருந்துவதன்று. பொது வாக இக்கால ஆராய்ச்சியாளர்கள் சமாதானம் சொல்ல முடியாததற்கெல்லாம் எளிய வழியாகக் கைகொள்ளும் முறைகளில் இடைச் செருகல் என்று தள்ளிவிடுவது ஒன் றாகும். வேங்கடத்தின் புகழ்: திருப்பதியின் புகழ் சமயச் சார்புடையது என்று முன்னர்க் குறிப்பிட்டேன். அதனை ஈண்டு தெளிவாக்குவேன். ஆழ்வார் பெருமக்களால் மங்க ளாசாசனம் செய்யப்பெற்ற திருவேங்கடம் பதினொன் றாம் நூற்றாண்டில்தான் பெரும் புகழ் அடையத் தொடங்கியது. இராமாநுசர் திருவேங்கடத்தின்மீதுள்ள திருக்கோயிலின் பால் காட்டிய அக்கறையும் அவருடைய சொந்தப் பெருமையும் சிறப்புமாகச் சேர்ந்து திருக்கோயி லின் பெருமையை மிகவும் உயர்த்திவிட்டது. இராமாநுசர் திருமலைக்கு மூன்று தடவை வந்ததாக அவரது வரலாற்றால் அறியக்கிடக்கின்றது. இன்று திரு மலையில் நடைபெறும் வழிபாட்டு முறைகள் யாவும் இராமாநுசர் வகுத்தவையே என்று திருமலையொழுகு' என்ற நூலால் அறிகின்றோம்." இராமநுசர் திருவேங்கட 11. காலப்போக்கில் சில முறைகள் வழக்காறு அற் றன என்றும் சொல்வர்.
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/92
தோற்றம்