பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் பகைப்படைகளை அழித்துப்பெறும் வெற்றிகளையே நினைந்து கொண்டிருக்கும். போரில் புண் பெரு நாட்களெல்லாம், பயனில் நாட்களாம் என்ற உணர்வுடைய கிை. விட்ட ஒருவளுலும், அவன் படையாலும், போரோய்ந்து ஓரிடத்தே அடங்கியிருப்பது என்பது இயலாது என்பது உண்மை! ஆனால், இது, கூதிர்ப்பருவம், கூதிர்க்குளிரின் கொடுமை தாங்கமாட்டாது, உலகத்து உயிர்களெல்லாம் உணவும் வெறுத்து, த த் த ம் உறையுள்களுள், தத்தம் பெடைகளோடு அடங்கிக் கிடக்கும். அது, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கும் பொருந்தும்; கூதிர்ப்பருத்தில், புறம் சென்று போருற்றுவது இயலாது என்பதிேைலயே, அப்பருவம் வரை அவனும், அவன் நாற்படையும் சிறிதே ஓய்வு கொண்டுள்ளனர். மேலும், நறவு கடலைச் சார்ந்திருக்கும் நகராகும். அதல்ை கூதிர்ப்பருவத்தின் கொடுமை ஆங்கு மிகுதியாகவே இருக்கும். மலேயென எழுந்து அடங்கும் அலைகள், கடல் நீரைச் சிறுசிறு துவளைகளாக்கி ஓயாது தாவிக்கொண்டேயிருக்கும். கூதிர்க்கொடுமை, ஆடவரினும் மகளிரை, அதிலும் கணவனைப் பிரிந்திருக்கும் மகளிரை அதிகமாகவே கொடுமைப்படுத்தும். போர்கொண்டு சென்று ப ைக வ ர் க ளை வெற்றி கொள்வது, பகைப்புலத்தில் கொண்ட பொருள்களை, இரவலர்க்கு வாரி வழங்குவது ஆகியன எவ்வாறு ஒரு பெருவீரனின் கடமைகள்ஆமோ, அவ்வாறே, குளிரால் நடுங்கிக்கிடக்கும் உரிமை மகளிர்பால் சென்று, அவர் துயர்போக்க வேண்டுவதும் அவன் கடமை. யாம். ஆக, தான்் ஆற்றவேண்டிய கடமைகளை அவற்றை ஆற்றவேண்டிய பருவமறிந்து தப்பாது ஆற்றிக் கொண்டிருக்கும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் கண்டு பாராட்டபாண்மகளே! புறப்படு நறவு நோக்கி; ஆங்கு அவன் பரிசுப் பொருள்களைத்தவருது வாரி வ ழ ங் கு வ ன், பெற்று மகிழ்வாயாக!” எனக்கூறி வரைவுபடுத்தின்ை. -

91

91