பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுக்க மாட்டாத மரம்படு = தீங்கனி மரத்தில் விளைந்த இனிய நெல்லிக்கனியாகிய அம் சேறு அமைந்த = இனிய சாறு நிறைந்த முண்டை விளைபழம் = முட்டை போன்ற முதிர்ந்த பழங்கள். ஆறு செல் மாக்கட்கு ஒய்தகை தடுக்கும் - வழிச்செல்வார்க்கு உணவாகி அவர் இளைப்பைபோக்கும்' மரு.அ விளையுள் = மாருத புதிப்புது விளைபொருள்களையும். அரு.அ யாணர் - குறையாத புது வருவாய்களையும் உடைய, தொடைபடிகளைந்த அம்பு தொடுப்பதில் மடிதல் இல்லாத சிலையுடை மறவர் வில்லையுடைய வீரர்கள். பொங்கு பிசிர் - பொங்கி எழுகின்ற சிறுசிறு நீர்த்திவலைகளை எறியும். புணரி = அலைகள். மங்குலொடு மயங்கி வரும் = மேகத்தோடு கலந்துவரும். கடல் ஊதையின் = கடல் காற்ருல். பனிக்கும் = குளிர்மிகுந்து நடுங்கும். துல்வா நறவின் = நறவு என்னும் ஊரில், சாய் இனத்தான்் = சாயலையுடைய மகளிரிடையே உள்ளான் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். தான்்கொலைவினை மேவற்று = அவன் நாற்படையோராகிய கொலைத் தொழில் விரும்பும் இயல்புடைத்து. தான்் இகல்வினைத் மேவலன் = அவன் சாயினத்தான்் ஆயினும், உள்ளத்தில் பகைவரை அழிக்கும் தொழிலையே விரும்புவன்; ஆதலால். தண்டாது வீசும் - நமக்குப் பரிசில் பொருள்களை வரையாதே வழங்குவன் பாண்மகள் = பாண்மகளே! க | னி ய ர் செல்லாமோ = அவனைக் காணச் செல்வோமா?

பேரரசர்களும் பெரும்படைத் தலைவர்களும் தம்புகழ் பாடும் புலவர், பாணர், பொருநர் போல்வார்க்குப் பரிசில் பொருள்களை வாரிவழங்குவதற்குக் கருதியே, ஓயாது போர் மேற்கொள்வர். வழங்குவதற்குப் பொருள் இல்லை என அறிந்த அக்கணமே, போர் முயற்சி மேற்கொண்டு விடுவர் என்பதற்கு எண்ணற்ற இலக்கியச் சான்றுகள் உள.

93

93