பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுடைத் தலைவன்

  ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

கண்ணகிக்குச் சிலைகண்ட செங்குட்டுவனையும், அவள் காவியமாம், சிலம்பு அளித்த இளங்கோ அடிகளாரையும் பெற்றெடுத்த பெருமைக்கு, உரியோனுகிய இமயவரம்பன்நெடுஞ்சேரலாதனின், இளைய மனைவியாகிய, வேளாவிக் கோமான் பதுமன்மகள் ஈன்ற மக்கள் இருவருள், இளையோன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், இவன் சேரநாட்டு அரியணையில் அமர்ந்திருந்தபோது, அந்நாட்டின் வட எல்லைக்கு அப்பாற்பட்ட, தண்டாரணியம் என்ற காட்டில் வாழ்ந்திருந்த மறவர் கூட்டம், சேரநாட்டினுள் புகுந்து, அந்நாட்டவரின் ஆட்டு மந்தைகளைக் கவர்ந்து சென்றதாக, அஃதறிந்த இவன், தண்டு கொண்டு தண்டாரணியம் புகுந்து, ஆடு கவர்ந்து வந்தாரைப் பேராடிவென்று, ஆட்டு மந்தைகளை மீட்டுக் கொணர்ந்து, தொண்டி நகரத்தாராகிய அவற்றின் உரியவர்.பால் ஒப்படைத்தான். ஆட்சிப் பொறுப்பேற்கும் அவ்விளமைப் பருவத்திலேயே, அவன் ஆற்றிய இவ்வரும் பெரும் செயல்கண்டு, அவனைப் பாராட்டப் புகுந்த அந்நாட்டு ஆன்ருேர்கள், அவ்வெற்றிச்செயலை அவன் பெயரோடு இணைத்து, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என வழங்கிஞர்கள்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆற்றலில் சிறந்தவளுவன். அவன் சினத்திற்கு ஆளானவர் அனைவரும் அழிந்தே போவர். அவனோடு பகைகொண்ட பின்னரும், உயிர்கொண்டு வாழ்வார் ஒருவரும் இரார்; தன்னல் அழிவுறத் தக்கவர் என, அவல்லை அறுதியிடப் பெற்றவர், எத்துணைப் பெரிய படை.

5

5