பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுடையராயினும், அவன். அவரை அழித்தே தீருவன். எமன் விரித்த வலையில் வீழ்ந்தவர், எவ்வாறு பிழைத்தல் இயலாதோ, அவ்வாறே, களத்தில் அவன் கடுஞ்சினக் கண்வலையுள் அகப்பட்டவரும், உயிர்பிழைத்துப் போதல் இயலாது. பகை அழிப்பதில் அத்துணைவல்லவன் அவன் என்கின்றார், அவனைப் பாடிய புலவர் காக்கைப் பாடினியார்.

மாற்றரும் சீற்றத்து மாஇரும் கூற்றம் வலைவிரித்தன்ன நோக்கலை; கடியையால், நெடுந்தகை செருவத்தான்ே.

              -பதிற்றுப்பத்து : 51 : 35-37 

என்ற அவர் கூற்றினைக் காண்க.

அத்துணைப் பெருவீரனுகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்பால், பணிபுரிந்த நாற்படையும், அவனைப் போலவே போரில் சிறந்து விளங்கின. "விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும் தன்நாளை எடுத்து’’ என வள்ளுவர் போற்றும், வீரர் வழிவந்தவராதலின், அவன் படை வீரர்கள், போரில் பகைவர்களின் வாள், பாய்ந்து பாய்ந்து விளைத்த புண்களால்ஆம் வடுக்கண் விளங்கும் யாக்கையராகவே காணப்படுவர். களம்புகும் அவர்கள், களத்தில் பகைவர் உடலில் பாய்ச்ச உதவும், வேலேந்திச் செல்ல விழைவரே அல்லது, பகைவர் எறியும் வாளாலும் வேலாலும், தம் உடல் ஊறு படாவாறு உதவும் கவசம் அணியக் கருதார்; கவசம் அணியாது கையில் வேல்மட்டும் கொண்டு களம்புகும் அவர்கள், ஆங்குப் படைஅணியின் பின்வரிசையில் நின்று, போரிடவாவது நினைப்பார் என்றால், அதுவும் இல்லை. படை பிள் முன் வரிசையுள் புகுந்து போரிடவே, அவர்கள் பெரிதும் விரைவர். படைக்கலச்சாலையுள் நுழைந்து படைக்கலம் ஏந்தும் அவர்கள். "வேந்தன் அளித்த செஞ்சோற்றை, வயிறுபுடைக்க இன்று உண்டோம். நாளை, பகைவர்களின் பற்றற்

6