பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிய அரண்களைக் கைப்பற்றி, அவற்றின் அகத்தே இருந்து உண்பதல்லது,வெளியிற்கிடந்து உண்ணோம்" எனச் சூளுரைத்தவாறே, படைக்கலம் ஏந்திக் களம் புகுந்து, வஞ்சினம் வழங்கியவாறே, வெற்றிகொள்வர்.

"வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்"

                -பதிற்றுப் பத்து; 58; 3

"மெய்புதை அரணம் எண்ணுது, எஃகு சுமந்து முன்சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்”

               - பதிற்றுப் பத்து: 52: 6-7

"இன்று இனிது நுகர்ந்தனம்; ஆயின் நாளே மண்புனை இஞ்சி மதில் கடத்தல்லது, உண்குவம் அல்லேம் புகா, எனக்கூறிக் கண்ணி கண்ணிய, வயவர் பெருமகன்’’.

            -பதிற்றுப் பத்து: 38: 5-8

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், இவ்வாறு, ஆண்மை ஆற்றல்களில்தான், சிறந்து விளங்கியதோடு, தன்னொத்த பெருவீரர்களையே தன்படைமறவராகவும் பெற்றிருந்ததன் பயனுய், மழவர் என்ற மறமாண்புமிக்க மரபினர், அவன் ஏவல் கேட்டு வாழ்ந்தனர்; குடநாடு அவன் உடைமையாய்த் திகழ்ந்தது.

களம் புகுந்தவழிக் காலன்போலும் கொடியோய்க் காட்சிஅளிக்கும் சேரலாதன், நாடு போர்ஒழிந்து அமைதி பெற்றிருக்கும் நாட்களில், இயற்கைக்காட்சிகள் மலிந்த இடம்தேடிச் சென்றும், கூத்தாடும் களம் புகுந்தும் இன்ப வாழ்வு காணத்தவருன். கானற்சோலைகள் மலிந்து கவின்மிக்க

7

7