பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்பண்பு

காதலித்துக் கடிமணம் கொண்ட மனைவியர்பால் கொண்டுவிடும். மட்டற்ற அன்புப் பெருக்கால், ஆற்ற வேண்டிய கடமையை மறந்து, அவர்பாலே தங்கிவிடுவராயின் அத்தகையார் அரசராயின், பகைவென்றும் நாடுகாத்தும் பெறலாகும் மாண்பினை எய்தல் இயலாது. வணிகராயின், அகநாட்டில் தொலைதுாரம் சென்றும், கடல் கடந்தும்சென்று வாணிகம் புரிந்து பெரும்பொருள் ஈட்டும் மாண்பினைப்பெறல் இயலாது. உழவராயின், காலத்தே தொழில் தொடங்கி, நட்டு, இளங்களைகட்டு, எருவு இட்டு நிறை நீர் பாய்ச்சி நன்கு காத்து வருதலால் பெறலாகும் உழவுப் பெரும்பயன் பெற்று மாண்புறுதல் இயலாது. "மனைவிழைவார் மாண் பயன் எய்தார்"என்கிருர் திருவள்ளுவர்.

மனைவியர்பால்கொண்ட அன்புப் பெருக்கால் அவரிடத்தே தங்கிவிடுவார் நிலையே இதுவாயின், விறலியர் போலும் ஆடல் மகளிரின் ஆடல்பாடல்களால் ஈர்ப்புண்டு கடமை மறந்து போவார் நிலைகண்டு, உலகம் பழிக்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்த உலகியல் உண்மையை உணர்ந்தவர், புலவர் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்பால் அத்தகையதொரு பலவீனம் இருப்பதை உணர்ந்த புலவர், தாமும் ஒருபெண்ணே ஆயினும், தன் இனத்து ஒருத்தியால், அவனுக்கு ஒர் அவக்கேடு வருவதை அவர் விரும்பவில்லை; அதனுல், அவ்வுலகியல் உண்மையை அவனுக்கு உணர்த்த விரும்பினர்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் கண்டு அறிவுரை கூற அவன் தலைநகர் சென்றார்;ஆங்கு அவன் இல்லை; தலைநகரில்

10

10